Headlines

எவன்கார்ட் ; இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு




எவன்கார்ட் விவாகரம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 5 திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காலி நீதவான் நிலுபுலி லங்காபுர  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

 மேலும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும்  எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும்  நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் ஜுலை 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *