Headlines

ஒரேநாளில் 97 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்!

சவூதி , தலை நகர் ரியாத்திலுள்ள நகரங்களில் ஒன்று அல்பதீயா, இங்கு செயற்பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பு மையம் ஒன்று; முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்காக நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் பல நிகழ்ட்சிகளை பல மொழிகளில் நடத்தி வருகிறது. இந்த முயற்ச்சிகள் பல சந்தர்ப்பங்களில் அபார வெற்றியையும் தந்து வருகிறது, அண்மையில் அந்த அழைப்பு மையத்தின் முயற்ச்சியினால், ஒரு நாளில் 97 மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். இதனை share செய்வோம்

Read More

கத்தாரில் ரிஸ்வி முப்தி

– ஹாசிம் ஹம்ஸா – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது. “நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற்கான எங்கள் பங்களிப்பும்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் ஏற்பாட்டு குழுவினர். அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-மஹ்மூத் இஸ்லாமிய கலாசார மைய கேட்போர் கூடத்தில் (FANAAR) வரும் வெள்ளிக்கிழமை (09-10-2015) இரவு 7.30 மணி…

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

கட்டார் வாழ் இலங்கையருக்கான, ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டி..!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு SLDC Qatar  அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி தொடக்கம்  ஆஐஊ  விளையாட்டு அரங்கம், உம் சயிட் இல் சயிட் நடைபெறும். இந் நிகழ்ச்சி விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்சிகளாக அமையும். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என வரையறுக்கப்பட்டு முற்றிலும் இஸ்லாமிய சூழலில் நிகழ்சிகள் பூத்து மணம் வீச இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஈகைத் திருநாளில்…

Read More

‘கட்டாரில் உள்ள இலங்கையர்களின், சம்பளங்கள் வங்கி ஊடாகவே வழங்கப்படும்’

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளது. வங்கியின் ஊடாக மட்டுமே சம்பளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்…

Read More

கட்டாரில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ் பெருநாள் ஏற்பாடு

வழமை போன்று இம்முறையும் கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழியிலான கொத்பாப் பிரசங்கமும் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்டாரில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் தாய் அமைப்பாக செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கதார் அமைப்பு (SLMQ) செய்துள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட இருப்பதால் கட்டார் வாழ் இலங்கை…

Read More

ரியாத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் (டிரைவர்) கவனத்திற்கு!

சவூதி தலைநகர் ரியாத் சாலைகளில் புதிதாக ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து நிதானமாக வண்டியை ஓட்டவும். வாகனத்தில் வேகமாக சென்றால் கேமரா அடித்துவிடும். கேமரா அடித்தால் 500 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.

Read More

வெளிநாட்டு வேலை – பெருமையா? கொடுமையா?

– ஷான் – பையன் என்ன பண்றாரு…? ‘பயணத்துல இருக்காரு’ – என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் . இன்னும் பலர் ‘camp -dubai’ என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ – பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு…

Read More

சவூதி வேலை சம்மந்தமான வழக்குளில் இனி உடனடி தீர்ப்பு!

சவுதியில் வீட்டு வேலை மற்றும் கம்பெனி வேலை சம்மந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினையை தினமும் சந்திக்கிறார் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர சவுதி தொழில் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி: வீட்டு வேலையில் சம்பளம் மற்றும் பிற பிரச்சினைகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் 5 நாட்களில் அவருடைய sponsor முன்நிலையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் அப்படி வழக்கு முடியவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்நிலையில் 10…

Read More

கத்தார் கலைஞர் மன்றம் உதயம்

கத்தார் வாழ் இலங்கை கலைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கத்தார் கலைஞர் மன்றத்தை இன்று (10) அங்குராப்பணம்செய்துவைத்துள்ளனர். கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கென பல்வேறு அமைப்புக்கள் இயங்கிவந்தாலும் கலைஞர்கள், படைப்பாளிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் ஊக்குவிக்கும் எந்த அமைப்புக்களும் இதுவரை இல்லை என்பதை கவனத்தில்கொண்டுஅதேநேரம் எங்களை நாங்களே தத்தெடுக்கும் ஒரு முயற்சியாய் இந்த மன்றத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் அங்குராப்பண நிகழ்வில் கீழ்வரும் நிருவாகம் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளது; தலைவர் எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் செயளாலர் Free visa குறும்பட இயக்குனர் ஸம்சுல் A ரசீட் பொருளாலர்…

Read More

ரியாத் வாழ் சகோதரர்களுக்கு இலவச உம்ரா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ரியாத் வாழ் சொந்தங்களுக்கு! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/07/2015 வியாழக்கிழமை உம்ரா பயணம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த இருக்கைகளே உள்ளன.  புனித உம்ரா பயணம் வரவிரும்பும் சகோதரர்கள் பதிவு செய்து கொள்ளவும். நிபந்தனைகள்: 1) முன்பு உம்ரா செய்யாத புதிய சகோதரர்களுக்கு முன்னுரிமை 2) குறைவான சம்பளத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு: கேப்டன். அமீர் அப்பாஸ். 0543507743. தகவல்  :Hussain Ghani.

Read More