Headlines

சவூதியில் சாரதி அனுமதி பத்திரத்தை 72 மணித்தியாளங்களுக்குள் புதுப்பிக்கும் வசதி !

சவூதி அரேபியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை துரிதமாக புதுப்பித்துக்கொள்ள புதிய முறையை அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாரதி அனுமதிபத்திரத்துக்கு விண்ணப்பித்து 72 மணித்தியாலங்களுக்குள் அல் வெசல் சேவை ஊடாக உங்கள் முகவரிக்கே அனுப்பப்படுமென அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை சவூதி அரேபிய போக்க்குவர்த்து திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்..

Read More

அரபு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நாளை நோன்பு ஆரம்பம்

உலகின் பல்வேறு பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாளை திங்கட்கிழமை 6 ஆம் திகதி தொடக்கம் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. இந்த புனித ரமழான் மாதத்தில் நற்கருமங்களை அதிகமாக்கி, ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நமக்கு துணை நிற்கட்டும்..!

Read More

சவூதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு சவுதி அரேபியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையுடன் 35 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் ஒபாமா சந்திப்பு

சவுதி அரேபியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வளைகுடா நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு தொடர்ந்து உதவுமாறு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. அதேநேரம் அணு ஆயுத உற்பத்தி செய்வதாகக் கூறி ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிரிகள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read More

சவூதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்!

சவூதி அரேபியாவில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அந்நாட்டு தொழிற்துறை அமைச்சு இத்தகையதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது. மொபைல் சாதன தொழிற்துறை , விற்பனை , பராமரிப்பு , உதிரிப்பாகங்கள் என அனைத்திலும் இனி சவுதி நாட்டுப் பிரஜைகள் மட்டுமே பணியாற்ற முடியும். இது செப்டம்பர் மாதம் 2 முதல் முற்றாக நடைமுறைக்கு வரவுள்ளது. இச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது…

Read More

கத்தாரில் ஸ்பொன்சர் முறை இனி இல்லை

கத்தாரில் அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்பொன்சர் முறையை இல்லாமல் செய்திருக்கிறார்கள். கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமுலாகி உள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம் என்று சொன்னால் அந்த இரண்டு வருட முடிவில் அந்த தொழிலாளி கட்டாரில் விரும்பிய இடத்தில் விரும்பிய நபரிடம் வேலை செய்யலாம் பிடிக்கா விட்டால் போயிட்டே இருக்கலாம். இச்சட்டம் பலருக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது. அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய…

Read More

சவூதியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!

சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய இணைய அட்டை (internet sim card ல்) தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம். அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது விமான நிலையத்தில் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் தமாம் விமான நிலையத்தில் 1600 ரியால் அபராதம் காட்டியுள்ளார். இதை அதிகமாக…

Read More

துபாயில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை

பல்வேறுபட்ட  திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமூக மறுமலர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிந்தவூர் நலன்புரிச்சபையின்  கிளை அண்மையில்  துபாயில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தலைவராக பொறியியலாளர் AL.சிராஜ் முகம்மது ,உபதலைவராக அல் ஹாபிஸ் AC அஸ்ரப், செயலாளர் AM.அச்சிமுகம்மது உப செயலாளர்      B.M.Y  நளீர் பொருளாளர், M.Y அன்வர்(சப்ரி) உட்பட இன்னும் அமீரகத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு  இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிகழ்விலே  விசேட உரையாற்றிய NWC  இன் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது உரையில்  “கல்வியினூடாக  முன்னேறி உலகளாவிய…

Read More

வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் இலங்கைப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்கும் செல்லும் பணிப்பெண்களுக்காக நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25  குவைட், ஜோர்தான், டுபாய், லெபனான், கட்டார், பஹரேன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான வயதெல்லை 23 இவையே தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய…

Read More

இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று (8) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது குற்றவாளிகள் வசம் இருந்து 8 கோடி இலங்கை ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக…

Read More

சவூதி பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

சவூதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதியின் உள்துறை…

Read More

சவூதியில் WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி !

சவூதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளது தொலை தொடர்பு துறை. ஆனால், இது நிரந்தரமாக இருக்குமா போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. UAE போன்ற மற்ற நாடுகள் இந்த தடையினை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read More