பணிப்பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் பணிப்பெண்களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஆரோக்கியத்தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்பாக ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் உபுல் தேஷப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதுவரை காலமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்பவர்களுக்காக…
