Headlines

இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளர்கள் (photos)

– ஏ,பி.எம்.அஸ்ஹர் – நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலு ள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.

Read More

உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள்

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா முகம்மது ஸாஜித் (வயது-21) எனும் இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வேளையில் குறித்த இளைஞரின் சிறுநீரகத்தை சீராக்குவதற்க்கு சுமார் 2750000/= ரூபாய்கள் தேவைப்படுகின்றது. எனவே அன்புக்குரிய சகோதரர்களே குறித்த இளைஞன் சுகமாக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும். உங்களால் முடிந்த நிதியுதவிகளை பின்வரும் விபரம் உடைய கணக்கிக்கு(வங்கி) அனுப்பி குறைந்தது share…

Read More

400 வருட பழைமைவாய்ந்த கருமலையூற்று, ஜும்ஆ பள்ளிவாசலை கைவிட்டு விடாதீர்கள்..!

-Mohamed Fairooz- திருகோணமலை, கருமலையூற்று பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இந்திய உத்தர பிரதேச தப்லீக் ஜமாஅத் குழுவினரையும் உள்ளூர்வாசிகளையுமே படத்தில் காண்கிறீர்கள். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள கருமலையூற்று பிரதேசத்தில் அமைந்திருந்த 400 வருட பழைமை வாய்ந்த ஜும்ஆ பள்ளிவாசலானது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் படையினரால் முற்றாக இடித்து நிர்மூலமாக்கப்பட்ட பிற்பாடு அக் காணியில் சதுர வடிவான மிகச் சிறிய கட்டிடம் ஒன்று பள்ளிவாசல் எனும் பெயரில் படையினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட முதல்…

Read More

ஏறாவூர் சதாம் ஹுஸைன் பள்ளிவாசலுக்கு சேதம்

ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராம சத்தாம் ஹுஸைன் பள்ளிவாசல் வளா­கத்தில் மின்னல் தாக்கி சேத­மேற்­பட்­டுள்­ள­தாக பள்ளிவாசல் நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­தனர். சனிக்­கி­ழமை பகல் இடி முழக்­கத்­துடன் பலத்த மழையும் மின்­னலும் காணப்­பட்­டது. இவ்­வே­ளை­யி­லேயே மின்னல் மேற்­படி சத்தாம் ஹுஸைன் பள்ளி வாசலின் வளா­கத்­தையும் தாக்­கி­யது. இதனால் மின்­சார பல்­புகள், மின் மானி, மற்றும் கட்­டிடம் என்­ப­ன­வற்­றுக்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிரு­வாகம் தெரி­­வித்­தது. மின்னல் தாக்­கும்­போது பள்ளிவாசலில் எவரும் இருந்­தி­ருக்­க­வில்லை என்றும் பள்ளிவாசல் நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­தனர்.

Read More

அமைச்சா் மஹிந்த அமரவீர வாழைச்சேனை விஜயம்

– அஸ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மற்றும் வட்டவான் இறால் பன்னைக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் வருகை தந்து மீன்பிடியாளா்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆரயாப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படடது. இதில் இறால் பன்னையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சா்களினால் ஆராயப்பட்டது இவர்களுக்கான ஒரு காரியாலயம் அமைக்கப்பட வவேணடும் என பிரதி அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அடுத்த வருடம் அமைத்து தருவதாக…

Read More

யானை தாக்கி ஆசிரியர் இர்பான் வபாத்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார். நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை சிசுக்கள்

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயான தம்பிராசா சுயமலர் (வயது 17) என்பவரின் கர்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் அவரது கணவனும் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விக்ரம ஆராச்சியின் அறிக்கையில் 17 வயதான இந்த இளம் கர்ப்பிணித் தாய்க்கு காட்டு யானைத் தாக்குதலால் தலையில்…

Read More

மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது

விபத்தில் உயிரிழந்த மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவனின் சடலம் மட்டக்களப்பிற்கு எடுத்துவரப்படவுள்ளது. இன்று காலை தொடக்கம் பெரியகல்லாறு, முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹற்றனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை…

Read More

யானை தாக்கி கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி பலி! (2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வீட்டை தாக்கிய போது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்துள்ளார். இதன்போது யானையின் தாக்குதலில் இருந்து தப்ப முனைந்த கணவரும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மூதுரை பிறப்பிடமாகவும் நெல்லிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.மோகனதாஸ் (30வயது)  அவரது…

Read More

மட்டக்களப்பில் யானை தாக்கி கணவன் மற்றும் மனைவி பலி!

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை – நெல்லிக்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காட்டிலுள்ள அவர்களது வீட்டை உடைத்த யானை, உறங்கிக் கொண்டிருந்த குறித்த இருவரையும் தாக்கிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதீக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கல்குடாவில் அதிகரித்து வரும் ஷியாக்களின் அட்டகாசம்

– வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை – இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் கேடு கெட்ட கொள்கையை எமது நாடு பூராகவும் அதி தீவிரமாக பரப்பிக் கொண்டிருக்கிறா்கள் என்பதை நாம் அறிந்ததே இந்த ஷீஆக்களின் வளர்ச்சியின் முக்கிய பங்கானது எமது கல் குடாவையே சாரும் என்றாலும் மிகையில்லை எவ்வாறெனில் ஈரானிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காகவே அனுப்பப்பட்ட முக்கிய பெயர்…

Read More

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. ‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்துகொண்ட இந்த செயலமர்வு விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்…

Read More