Headlines

மார்க்க அறிஞராக வரவேண்டுமென்ற, சிறுவனின் உயிரை குடித்த புல்டோசர் (படங்கள்)

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு  நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும்  கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது. தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015)  சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப்…

Read More

அஹமட் முஷர்ரப் பெற்று சாதனை!

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (07) புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி சல்மா ஜவாஹிர் ஆகியோரின் புதல்வருமாவார்.

Read More

மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது. சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும்…

Read More

ஆசிரியர் யாகூப், பிரதீபா பிரபா விருது பெற்றார்..!

– சுலைமான் றாபி – கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மீராலெப்பை யாகூப் ஆசிரியர் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை, கோட்டம்,  மற்றும் வலய மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு  ஆசிரியர் தினமான நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 25 வருட ஆசிரியர் சேவை மூப்பினைக் கொண்ட இவ்வாசிரியர்  பாடசாலைக்காலங்களில்…

Read More

மட்டக்களப்பு பொலிஸாரின் போக்குவரத்து விழிப்புணர்வு

மட்டக்களப்பு, பாசிக்குடா வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதை அடுத்து  கல்குடா போக்குவரத்துப் பொலிஸார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள்  மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடத்தினர். வீதியில் எவ்வாறு போக்குவரத்துச் செய்வது என்பது தொடர்பான பயிற்சியும் விளக்கமும் பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி விளக்கம் அளித்தனர் பொலிஸார். வாரத்தில் ஒருநாள் இந்தச் செயற்பாடுகள் நடத்தப்படும் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரி அதிபருக்கு எதிராக பாதிக்கபட்ட மாணவியின் பெற்றோர் உண்ணாவிரதம்

-நூர்தீன் பவுஸ் – பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் அண்மையில் அதிபர் அவர்களினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகளாலும் ,மாணவி ஒருவருக்கான  பரிட்சை அனுமதியட்டை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் குறித்த மாணவியும், பெற்றோரும் நீதியினை நாடி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரை நாடிய பொழுதும் இதுவரை உரிய அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும்,  குறித்த மாணவிக்காக வேண்டி நீதியினை பெற வேண்டி, தற்போது,  பாதிப்படைந்த மாணவியின் பெற்றோர் பொத்துவில் பிரதேச செயலகம் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அரசியல்…

Read More

உலமாக்கிடையே விட்டுக்கொடுப்பு இல்லாமல் போய்விட்டது – கோவை அய்யூப்

– டீன் பைரூஸ் – காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டினில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெறவுள்ள ‘மாமறைக்கு ஓரு மாநாடு’ தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று அதர் மஸ்ஜிதின் தலைவர் சகோதரர் எம்.றவுப் தலைமையில் 29.09.2015 செவ்வாய் இஷா தொழுகையின் பின்னர் தாருல் அதர் மஸ்ஜிதில் இடம் பெற்றது. மேற்படி ஊடக சந்திப்பின் போது தாருல் அதர் மஸ்ஜிதின் தலைமை இமாம் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) பிரபல தென்னிந்தி மார்க்க பேச்சாளர் கோவை…

Read More

அகில இலங்கை ரீதியாக பாத்திமா சிம்தா செய்த சாதனை இது

– சுலைமான் றாபி – இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார். நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டியில் வெற்றி பெற்று முதலாவது…

Read More

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத 1200 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார். ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்,பெண் வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டனர். புதிய அரசாங்கமே வேலை வழங்கு,…

Read More

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கான, பழைய மாணவர் சங்கத்தின் தேவை…!

– முஸ்தபா முர்ஸிதீன், ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்- ஒரு பாடசாலைக்கு, அதன் வெற்றிக்கு பழைய மாணவர் சங்கம் என்பது இன்றியமையாத ஒன்று. இன்று இலங்கையிலும் சரி உலகிலும் சரி மேலோங்கி நிற்கின்ற பாடசாலைகளின் பல்வேறு தேவைகள்; பௌதீக, மனித வளம் சார்ந்தவை, அப்பாடசாலைகளின் பழைய மாணவர்களினாலே பூர்த்தி செய்யப்படுகின்றன. இது இவ்வாறிருக்க எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலே பெயர் பதித்து நிற்கின்ற மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு ஒரு பலம் வாய்ந்த பழைய மாணவர் சங்கம் இல்லை…

Read More

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான, ஒருநாள் பயிற்சிப் பட்டறை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களுக்குமான ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ‘விடியல் ஸ்ரீலங்கா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல், தகவல் அறியும் சட்டமூலம், அறிக்கையிடலுக்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் ஆகிய தலைப்புகளிலும் விரிவுரைகள்…

Read More

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…

Read More