Headlines

உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா

– டீன் பைரூஸ் – காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் இரண்டாவது வெளியீடாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் இடம்…

Read More

31 வருடகல்விச் சேவையிலிருந்து விடைபெற்றார் அதிபர் பாறூக்..!

 – காரைதீவு  நிருபர் – சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எச்எம்.பாறுக் தனது 31வருடகால கல்விச்சேவையிலிருந்து   19ஆம் திகதி திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுவதையொட்டி   பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. காலை ஆராதனையில் பாடசாலையில் பயிலும் சுமார் 400மாணவர்களின் மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. காலைநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் வரவேற்புடன் ஆசிரியர்களால் மாலைகள்சூட்டப்பட்டு ஆராதனை மேடைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் வலயக்கல்விப்பணிமனை சார்பில் கலந்தகொண்ட உதவிக்கல்விபப்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்….

Read More

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இரு மீனவர்கள் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதில் கோ.கிருஸ்ணரூபன் (வயது 26), இ.புலேந்திரன் (வயது 35) ஆகிய இருவருமே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது சடலம் கிராம சேவகரின் அனுமதியுடன் உறவினர்களினால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு பொலிசாரின் உதவியுடன் எடுத்து…

Read More

காணாமல் போன சிறுமியை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம்

மட்­டக்­க­ளப்பு கோற­ளைப்­பற்று மத்தி வாழைச்­சேனை பாலை­நகர் பகு­தி­யினைச் சோ்ந்த 13 வய­து­டைய மாணவி முஹம்­மது அலியார் பாத்­திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாட­சா­லைக்கு செல்­லும்­போது காணாமல் போயுள்ளார். இவரை கண்­டு­பி­டித்து தரு­மாறும்.இதன் சூத்­தி­ர­தாரி சட்­டத்தின் முன் நிறுத்­தப்பட்டு இக்­கு­டும்­பத்­திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுகோரி தியா­வட்­டவான் ஹுசை­னியா ஜிம்மா பள்­ளி­வாயல் மற்றும் பாலை நகர் றகு­மா­னியா ஜும்மா பள்­ளி­வா­யல்கள் இணைந்து நேற்று வெள்ளிக்­கி­ழமை ஜும்மா தொழு­கையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்­டத்­தினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்….

Read More

27 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி  மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் நேற்று (14) மாலை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதுடன், அபிவிருத்தி விடயங்கள், மக்களது பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் 22 மீனவர்கள் கைது (படங்கள்)

– எம்.ஏ. தாஜகான் – பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.  சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில்…

Read More

அஷ்ரப் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து, கவனம் செலுத்துமாறு கோரிக்கை

ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐ தே கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள் குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி தெரிவித்தள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி  தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக ஒலுவில் அஷ்ரப் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் இராணுவ முகாம் அமைக்கப்போவதாக கூறி 2011ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை அப்போதே பகிரங்கமாக…

Read More

பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார். இவரின் மனைவியான முகம்மது இஸ்மாயில் சித்தி பரினா (38 வயது)  என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவர். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் நேற்று  பிற்பகல் 4.00 மணியளவில் வீட்டில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில்…

Read More

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் 1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கின!

ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை…

Read More

முதல் மூன்று இடங்களும் கல்முனை கல்வி வலயத்திற்கே

– பி.எம்.எம்.ஏ.காதர் – கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்.. இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் கல்முனை கல்வி வலயம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் இம்முறை அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி(தேசிய பாடசாலை)மாணவன் மதுரா கிருஸ்ண சைதன்னியன் 189 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தையும்,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் எம்ஆர்.முகம்மட் மரீஸ் 186 புள்ளிகளைப் பெற்று 2ம்…

Read More

அட்டாளைச்சேனையில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் சிக்கின

– அபு அலா – அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு கடந்த வாரமாக மிக அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள றஹ்மான் ராஜா கரைவலை மீனச்சங்க மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே நேற்று வியாழக்கிழமை சுமார் 2500 பாரை மீன்கள் சிக்கியதாகவும், சுமார் இந்த மீன்கள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இந்த மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன்…

Read More