Headlines

புத்தளம் முல்லை ஸ்கீம் கிராம பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

புத்தளம் முல்லை ஸ்கீம் கிராம பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், கலை நிகழ்ச்சியும் இன்று (03) மாலை இடம்பெற்றது.  இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். பாலர் பாடசாலை ஆசிரியர்களான அனீஸ் ஜெரீஸா (மௌலவியா) மற்றும் மசூத் மஸாஹிமா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின்  புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள்…

Read More

“ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!

மிகவும் சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருடப்பூர்த்தி நிகழ்வு, அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில் இன்று (03/ 12/ 2017) அல் காசிமி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகப்…

Read More

மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது. ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.      

Read More

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.  

Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில், வவுனியா, புதிய சாளம்பைக்குளம் வீதியை கொங்ரீட் பாதையாக புனரமைப்பதற்கான  ஆரம்பகட்ட வேலைகளை,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான முத்து முஹம்மட் மற்றும் அப்துல் பாரி ஆகியோர் இன்று (24/ 11/ 2017) ஆரம்பித்து வைத்தனர்.

Read More

கல்பிட்டி பிரதேசத்தில் முதல் முறையாக அரச நிதியொதுக்கீட்டில் நகர மண்டபம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியாவின் சிபாரிசின் பேரில், கொத்தாந்தீவு கட்சி அமைப்பாளர்களான நஸீர் மற்றும் செயலாளர் நாஸிம் ஆகியோரின் வேண்டுதலுக்கமைய, கொத்தாந்தீவில் நகர மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஆப்தீன் எஹியா கூறியதாவது, கல்பிட்டி பிரதேசத்திலே முதன்முறையாக…

Read More

“தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்” மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் டாக்டர். ஹஸ்மியா தெரிவித்தார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற மகளிர் ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேசிய இணைப்பாளராக நான் பணியாற்றுவதால், நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை…

Read More

” நீ ” எனும் ரிஷாட்!

“நீ” எனும் ரிஷாட்!!! அணுகுண்டுகளும் ஆகாய விமானங்களும் வெடித்துச் சிதரினாலும் எனது ஆத்மா அல்லாஹ்விடம் அழகாய்ப் போய்ச் சேரும்” என்று கூறிவிட்டு மறைந்த மாபெரும் தலைவன் அஷ்ரபின் சங்க நாதமாகிய போராளிகளே புறப்படுங்கள். மர நிழல்களில்  ஓய்வெடுக்க உங்களுக்கு நேரமில்லை.   கடமையைச் செய்ய சமுதாயம் அழைக்கின்றது என்ற வீர முழக்கத்தின் வீர நடையாக விரைந்து செயல்படுபவன் நீ!  பேசினால் பூங்காற்று, வீசினால் புயல் காற்று நீ. உழைப்பு உனது தாரக மந்திரம்.  உழைப்பே உன் போதி மரம்….

Read More

குருணாகல் மாவட்ட சிறுகைத்தொழில் ஆலை ஆசிரியைகளுக்கு நிரந்தர நியமனம்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்திட்டத்துக்கமைய, யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், குருணாகல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலைகளின் (Mini Garment) பயிற்சி ஆசிரியைகளுக்கான நியமனக்கடிதம், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகரும், அஇமகா வின் குருணாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர்…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி அ.இ.ம.கா.வில் இணைவு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி நிந்தவூரைச் சேர்ந்த ALA.ரசூல் நேற்று (18.01.2017) அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் முன்னிலையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார்.

Read More