Headlines

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள். உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி…

-முர்ஷித்- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்று மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் 22 வது ஆண்டு நிறைவும், மாணவர் வெளியேற்று நிகழ்வும் நேற்று முன்தினம் (11) வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

வவுனியா மதீனா நகர் அல்/அக்ஸா முன்பள்ளி கலைவிழா!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மதீனா நகர், அல் / அக்ஸா சிறுவர் முன்பள்ளியின் 2017ம் ஆண்டுக்கான கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். அப்துல் பாரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.        

Read More

மல்கடுவாவ பிரதேச மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின்  மல்கடுவாவ பிரதேச பெரும்பான்மை மக்களுடனான சந்திப்பொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)  மல்கடுவாவ பிரஜா மண்டபத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான  அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற  இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.    

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அநுராதபுர மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து களமிறங்குகின்றது!

-ஊடகப்பிரிவு-    அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று காலை (12) அநுராதபுர…

Read More

பிறைந்துறைச்சேனை அல்/இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா!

-முர்ஷித்- சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் / இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம்…

Read More

கண்டி மாவட்டத்தில் வேரூன்றும் மக்கள் காங்கிரஸ்! மயில் சின்னத்தில் தனியாக போட்டியிடவும் ஆலோசனை!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதரின் (கம்பளை காதர் ஹாஜியார்) மருமகன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான நசார், உடையார், ஹனீபா ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More

திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மாவட்டங்களின் பெரும்பாலான சபைகளில் மக்கள் காங்கிரஸ் மயிலில் குதிக்கின்றது!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செயலாளர் எஸ்.சுபைர்தீன், அந்தந்த மாவட்டங்களின் செயலகங்களில் செலுத்தியதாகவும் மக்கள் காங்கிரசின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளை மேற்கு பிரதேச சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, காத்தான்குடி நகரசபை ஆகியவற்றிலும், திருகோணமலை…

Read More

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் மயில் சின்னத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கட்டுப்பணம்…

-ஊடகப்பிரிவு-    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் களமிறங்க இளைஞர்கள் முண்டியடிப்பு! சிராஸின் அணுகுமுறைக்கு வரவேற்பு…

ஏ.எச்.எம். பூமுதீன் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அம்பாறை மாவட்டம் வழமை  போன்று சூடுபிடித்துள்ளது. கட்சியால் அதிகாரமளிக்கப்பட்டோர் தத்தமது கட்சி வேட்பாளர் தெரிவை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், மு.கா முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸனலி தேர்தல் கூட்டு வைத்து “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” எனும் பெயரில் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேச உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளன….

Read More

“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம்!!!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தருமான ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம் நேற்று (10/ 12/ 2017) கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காகவும் ஐக்கியத்திற்காகவும் நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தவும் உறுதிபூண்டு செயற்படுகின்ற றிசாட் பதியுதீன்…

Read More

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம்… அமைச்சர் ரிஷாட், ஹஸன் அலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்!

சுஐப் எம்.காசிம்   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இன்று காலை (10)…

Read More

மு.கா முக்கியஸ்தர், முன்னாள் தவிசாளர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ.பி.எஸ். ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே, தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட், தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Read More