ACMC News
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…
உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை (08/ 12/ 2017) இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள்…
முன்னாள் எம்.பி முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு!
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இன்று (08) இணைந்து கொண்டார். இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்….
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், புத்தளம் தளவைத்தியசாலைக்கு 18 வைத்தியர்கள் நியமனம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் உதவியினால் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்திகளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குவதற்க்கான திட்ட வரைவு செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில், புத்தளம் தள வைத்தியசாலைக்கான திட்ட வரைவு வேலைகளை முன்னெடுக்கும், CECB நிறுவனத்தின்…
மாஞ்சோலை பதுரியா அல்/மினா வித்தியாலய கட்டிடத்திறப்பு நிகழ்வும்.. பரிசளிப்பு விழாவும்!
மட்டக்களப்பு மாவட்ட மத்திய கல்வி வலையத்துக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் / மினா வித்தியாலயத்தின் 07 வது பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதிக் கல்விப்…
விதவைகளுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில், இளம் பெண்களுக்கான முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில், கணவரை இழந்த விதவை பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்துக்கமைய, சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,கொழும்பில் இன்று (06/ 12/ 2017 ) இடம்பெற்றது.
முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளின் கலை கலாசார நிகழ்வில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!
முள்ளிப்பொத்தானையில் உள்ள 05 முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை, கலாசார நிகழ்வு, முள்ளிப்பொத்தானை, அல்/ஹிஜ்ரா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட்கிழமை (04/12/2017) அன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தம்பலகாமம் பிரதேச செயலக…
பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வொன்று,கடந்த 25 புத்தளம் அநுராதபுர வீதியில் அமைந்துள்ள, கால்டன் வீவ் ரிஷப்சன் மண்டபத்தில் நடைபெற்றது. 2017/2018 கல்வியாண்டுக்கான ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்குமான அறிமுக செயலமர்வாகவும், கௌரவிப்பு நிகழ்வாகவும் புத்தளம் மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுள்ளது. குறித்த நிகழ்வானது பல்கலைக்கழக சூழல் பற்றிய பூரண அறிவை மாணவர்களுக்கு வழங்கியதோடு, பல்கலைக்கழக ஆன்மீக விடயங்களைப் பேணுதல்…
மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகள் டாக்டர். ஹஸ்மியா தெரிவிப்பு
பெண்களின் நலன்களைக் காத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய வகையில், பல்வேறு திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாகவும், இந்த வகையில் முன்பள்ளிகளை அபிவிருத்திச் செய்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கும் புதிய திட்டத்தை, தமது கட்சி செயற்படுத்தி வருவதாகவும், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலையத்துக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு, மருதமுனை அமைப்பாளர் சித்தீக் நதீரின் ஆலோசனையில் மருதமுனை…
“அரசியலிலிருந்து ஒதுங்கிவிட எண்ணிய எனக்கு, புதிய தெம்பு கிடைத்திருக்கின்றது” முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹம்ஜாட் தெரிவிப்பு!
அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவோமா என்ற சலிப்புடன் இருந்த எனக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் சேவைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், மீண்டும் அரசியலில் நாட்டம் ஏற்பட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட் தெரிவித்தார். கண்டி உடதலவின்னவில் நேற்று முன்தினம் (04/ 12/ 2017) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, கண்டி மாவட்டத்தில் பேரினவாதக் கட்சிகளில்…
முன்னாள் செயலாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு விசாரணை பெப்ரவரி 08 ஆம் திகதி..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ்.சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (04/ 12/ 2017) அறிவித்தது. மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ்.சுபைர்தீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கட்டாணையையும் (Enjoining),…
ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!
ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் இல்லத்தில் நேற்று (03) இடம்பெற்றது. பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
