ACMC News
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விடாமுயற்சியால் 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் விடா முயற்சியால் தற்காலிகமாக புல்மோட்டை கனியவல தினைக்களத்தில் பணிபுரிந்த 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் முல்லிபுரம் பாடசாலை வீதி அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை பார்வையிடும் போது..
மன்னார் நகரமண்டபத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது… (வீடியோ)
29.09.2016 அன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ) இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது…
கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரை வீதியில் மழை காலங்களில் கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்காக தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளருமான அஸார்தீனின் ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர நகர விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை (02) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான ஹஜ்விளையாட்டுப்போட்டியில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, மக்கள்…
மாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிஷாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது
மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்தை அமைச்சர் றிசாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் அடுத்தடுத்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகள், அமைச்சர் றிசாத் மீது கொண்ட காழ்ப்புணர்வையும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சி தங்களது கட்சியினதும், தமது எதிர்கால பிரதிநிதித்துவத்தினதும் இருப்புக்கு பாதிப்பை வெளிப்படுத்திவிடுமோ என்ற அச்சத்திலுமே இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்டீன், மக்கள் காங்கிரஸின்…
மு.கா.வின் மூத்தபோராளிகள் பலர் அ.இ.ம.கா.வில் இணைவு
கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷாத்அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார். கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
மக்கள் காங்கிரஸின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில்
-சுஐப் எம்.காசிம் – அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் நேற்று மாலை (29/08/2016) கொழும்பில் கூடி, தீர்க்கமாக ஆராய்ந்து இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு, அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து காத்திரமான முடிவுகளை மேற்கொண்டனர். கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து பெற்ற தகவல்கள்,…
sincere thanks to the Prime minister Ranil Wicramasinghe – Subairdeen ACMC Secretary General
The All Ceylon Makkal Congress is delighted to extend its sincere thanks to the Hon. Prime minister Ranil Wicramasinghe for having taken timely action to debar the attempts by the security forces to ban the , Nikab and Abayah the Muslim Women’s attire. The right to practice one’s Religion and to follow its preachings is…
அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன் நிகழ்வின்போது கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் முஸ்லீம் பாடசாலை ஒன்றிற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…
மக்கள் காங்கிரஸுக்கும் மருதூர் அன்சாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இலங்கை மக்கள் காங்கிஸில் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கு மாத்திரமே உரித்துடையது எனவும்,…
