Headlines

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!





அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *