Headlines

செந்நெல் கிராமத்தில்  அபிவிருத்தி செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமனற உறுப்பினர் இஸ்மாயில் கலந்துகொண்டார்.

தனித்துவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் இன்று செந்நெல் கிராமத்திலுள்ள ஹிஜ்ரா வித்தியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌரவ. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. ஏற்கனவே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரமமொன்று இத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் இக் கிராமம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 10 பிரதேச செயலகங்களுக்கான 100 மில்லியன்…

Read More

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கரையோர வீதியானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரதியமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் இன்று (26) ஞாயிற்றுக் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மிக நீண்ட கால…

Read More

ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு திருப்தியளிக்கிறது- இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

ஜனாதிபதி மைத்திரிபலால சிறிசேனவிற்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான இன்றைய சந்திப்பு திருப்தியளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.இச்சந்திப்பு இன்று(25) இடம்பெற்றது. ஜனாதிபதியுடனான இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,அலிசாஹிர் மௌலானா, , பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.ஐ.எம். மன்சூர், காதர்…

Read More

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து,  தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள்; பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது , இந்த சபையிலே ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்; ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று மாலை (09) கொள்ளுப்பிட்டி மென்டரின் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர்…

Read More

நாட்டில் அமைதி சமாதானத்திற்கான பிரார்த்தனை களமாக புனித நோன்பு காலத்தை பயன்படுத்துங்கள் -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

கண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் அருள் நிறைந்த அற்புதமான றமழான் நம்மை வந்தடைந்திருக்கிறது. இதனை வரவேற்கும் நாம் இப்புனித நாட்களில் நல் அமல்களில் ஈடுபடுவதுடன்  நாட்டின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் சமூகத்தின் நிம்மதிக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கும் தினங்களாக பிரகடனப்படுத்துவோம். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள புனித றமழான் தினச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். படுபாதகர்களின் ஈனச்செயல்களினால் இந்த நாட்டு முஸ்லிம் சமுகம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.சுதந்திரத்திற்கு பின்னரும் முன்னரும் தேசப்பற்றாளர்களாகப் பார்க்கப்பட்ட சமூகம் சில கயவர்களினால் தேசத்துரோகிகளாகப் பார்க்கின்ற…

Read More

கர்த்தினால் மல்கம் ரங்சித் பேராயர் அவர்ளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி வேண்டுகோள்.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயர் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்.அதற்கான செயற்பாடுகளில் இன்றிலிருந்து நான் இறங்கப்போகின்றேன். என்று கிராமிய பொருளாதார விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட அந்தக்கொடூரமான சம்பவங்களின் பின்னர் இந்த நாட்டிலே மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.அந்த நெருக்கடியான சூழலிலும் தனது மக்களின் பாரிய உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காருங்கள் என்று…

Read More

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தை தனி ஒரு மனிதனாக நின்று பாதுகாத்த பெருமை ரிசாத் பதியுதீனையே சாரும் -பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-

புதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் திருகோணமலை துறை முகமானது மூன்று வருட கால துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கந்தளாய் அந்நஜா அரபுக் கல்லூரியில் பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேசத்தி அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் திருகோணமலை துறை முகம் ஏற்றுமதி,…

Read More

விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதிஒதுக்கீட்டில் 1000 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் அவர்களின் தலைமையில்…

Read More

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்

  நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார். இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் கடந்த சனிக்கிழமை (13) அன்று இடம்பெற்றது. இந்தப் பிரசாரத்தில்  மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டதுடன், அந்தப் பிரதேச பெண்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, வாக்களிக்கும் முறை பற்றிய தெளிவூட்டலையும் அவர்களுக்கு வழங்கினார்….

Read More