Headlines

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!





-ஊடகப்பிரிவு-

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் கடந்த சனிக்கிழமை (13) அன்று இடம்பெற்றது.

இந்தப் பிரசாரத்தில்  மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டதுடன், அந்தப் பிரதேச பெண்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, வாக்களிக்கும் முறை பற்றிய தெளிவூட்டலையும் அவர்களுக்கு வழங்கினார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *