ACMC News
இலங்கை முஸ்லீம்கள் ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் (14.06.2016) மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….
கோறைப்பற்றுவில், 50 வீட்டுத்திட்டம் ஆரம்பித்துவைப்பு
மட்டக்களப்பு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேணிநகர் 50 செமடசெவண வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 14.06.2019 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹைதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி கலந்து கொண்டு அடிக்கல் நட்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, கிராம சேவை உத்யியோகத்தர் தேவேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர், வீடமைப்பு…
‘ரண் மாவத்’ அபிவிருத்திகள் சம்மாந்துறையில் ஆரம்பிப்பு..!
‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி – முதலாம் குறுக்குத் தெரு – மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட் இடும் பணிகள் வேலைத்திட்டம் இன்று (14.06.2019) பி.ப. 1.30 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து), பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ….
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார்…
முஸ்லிம் பெண்களின் ஹபாயா விவகாரம் தொடர்பில் யாரும் திணிக்க முடியாது- ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அப்துல்லா மஃறூப் எம்.பி
அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது. இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் இங்கு வருகை தந்திருக்கும்…
கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்!
கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று (03) அதிகாலை மெட்ரோ நியூஸ் இணையத்துக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று 3 ஆம் திகதி மூடுவதென கண்டி சிங்கள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், 9.00 மணிக்கு அனைத்து வர்த்தகர்களையும் சிங்கள…
நல்லிணக்கத்திற்கான பாரிய பொறுப்பை சுமந்து பாடுபட ஊடகங்கள் முன்வர வேண்டும் -நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்
மக்களது உள்ளங்களில் இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் பொறுப்பு என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் . நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது(வியாழக்கிழமை-30) அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக சில ஊடகங்கள்…
பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்!!!
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (31) காலை இடம் பெற்றது. அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில்…
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர்…
நேரடிக்களத்தில் நின்றதற்கா இத்தனை நெருக்குவாரங்கள்?
சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள்,திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன.நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி,சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத்தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் எமது எதிர்கால இளம் சமூகம் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் நிர்க்கதியின் விளிம்பில் நிற்க வேண்டிய கதியே ஏற்படப்போகிறது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைத்து வந்த இந்தக் கடும்போக்குகளுக்கு, அண்மையில்…
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்!!!
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர்…
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தின் வீதிப்புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்…
மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் வீதிப்புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்….
