Headlines

கெகுணகொல்லையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்.. அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று மாலை (07) கெகுணகொல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

அம்பாறையில் ஐந்து சபைகளை கைப்பற்றும் வாய்ப்பு எமக்குண்டு! ஐ.ம .கூட்டமைப்பு தலைவர் ஹசன் அலி!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் அரசியலில் எம்மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவனவாக அமையும். இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஐந்து உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றும் வாய்ப்புண்டு என்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும்இ முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸனலி உறுதிப்படத் தெரிவித்தார். நிந்தவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம்களின்…

Read More

அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி மாநாடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மகளிர் அணித் தலைவிகளுக்கான மாநாடு இன்று(07) பொத்துவிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  மகளிர் அணித்தலைவிகளின்  ஊர்வலம் இடம்பெற்றதுடன், கவிதைகள் மற்றும் பாடல்களுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணித் தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Read More

‘சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின் நிற்கமாட்டோம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் திருமலையில் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- சமூகத்தில் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, வாளாதிருக்கமாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி, கந்தளாய், தம்பலகாமம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அக்கூட்டங்களில் மேலும் உரை நிகழ்த்துகையில், வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அகதியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று…

Read More

புல்மோட்டையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவாட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, புல்மோட்டையில் இன்று காலை (07) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சிறப்புரை ஆற்றினார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் உட்பட மக்கள்…

Read More

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒருசில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வீணாக்கிவிட வேண்டாமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…

Read More

‘முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்துள்ளது உள்ளுராட்சித் தேர்தல்’ சேகு இஸ்ஸதீன் வேதனை!

-ஊடகப்பிரிவு- “உள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது” – என வடக்கு, கிழக்கு மாகாண சபை முன்னாள் எதிர்க்;கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எச். ஏம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கிழக்கு மாகாணத்திலுள்ள…

Read More

‘மு.கா வினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா-  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் பிறைந்துறைச்சேனை வட்டார வேட்பாளர் நாஸருக்கு ஆதரவு தெரிவித்து, பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ஸ்ரீ…

Read More

“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- இஸ்லாமிய வரையறைக்குள் முஸ்லிம் பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போதுதான் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். நிந்தவூரில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, மூட நம்பிக்கையிலும், பெண்களால் முடியாது என்ற அறியாமையிலும் இருந்த பெண்கள், இன்று கல்வித்துறையில் மாத்திரமின்றி ஏனைய அனைத்துத்…

Read More

“குரல் கொடுக்காவிடினும் காட்டிக் கொடுக்காமலிருங்கள்” டாக்டர். பரீத்!

-ஊடகப்பிரிவு- “இன்று சமூகத்தை விற்றுப்பிழைக்கும் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் தேசியம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருகின்றனர். இவர்கள் எம்மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் அமைச்சர் ரிஷாட் போன்றவர்களைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைக் கைவிடவேண்டும்” இவ்வாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும், மக்கள் காங்கிரஸின் சுகாதாரப் பிரிவின் தேசிய இணைப்பாளருமான டாக்டர். ஏ.எல். பரீத் கூறினார். நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில்,…

Read More

“சுயநலம் கொண்ட தனிமனிதனிடம் மு.கா சிக்கித் தவிக்கின்றது” ஐ.ம.கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி!

 -ஊடகப்பிரிவு- அரசியலுடனும், ஆயுதக் குழுக்களுடனும் போராடி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இன்று சுயநலம் கொண்ட ஒரு தனி மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. அதனை மீட்டெடுப்பதே எமது பணியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம். ரீ.ஹசன் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் (03) நிந்தவூர் புதுநகர் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

Read More

“கிழக்கில் முஸ்லிம் மாகாணமின்றேல் இணைப்புக்கு ஆதரவு கிடைக்காது” சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- வடக்கு – கிழக்கு தமிழ் மொழி மாநிலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாண சபைக்கான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியம் முன்னெடுக்காது போனால் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு தமிழ்மொழி மாநிலத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி அதிகாரத்தையோ அல்லது சமஷ்டியையோ தமிழர்களுக்கு வழங்குவது வட, கிழக்கு முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாகவும்…

Read More