Headlines

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.. ஸ்திரமான ஆட்சிக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கும் – அமைச்சர் ரிஷாட்  

  உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை…

Read More

புதுக்குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

மன்னார் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர், புதுக்குடியிருப்பு வட்டார மக்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்! உலமாக்களே, புத்திஜீவிகளே, ஆசிரியர்களே, பள்ளி பரிபாலன சபைத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மகளிர் சங்கம், இளைஞர் அமைப்பு, விளையாட்டுக் கழகம் மற்றும் மீனவர் சங்கத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, அரச ஊழியர்களே, உறவுக்காரர்களே, முதியவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே,…

Read More

க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முஸ்லிம் கல்வி முன்னேற்றக் கழகம் 10ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9 ஏ (A) சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) கொழும்பு, நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அகமத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்…

Read More

புத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

புத்தளம், அல்காசிமி சிட்டி, மன்/ புத்/ ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் கோட்டக்…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர் ஐ.எஸ்.மொஹிடீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 04 ஆசனங்களையும், துணுக்காய் பிரதேச…

Read More

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்குகளும் ஆசனங்களும்!

கடந்த 10 ஆம் திகதி  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை  மாவட்ட முஸ்லிம்வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்துள்ள  வாக்குகளின் அடிப்படையில்  அமைச்சர்  ரவூப் ஹக்கீம்  தலைமையிலான  முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து  காணப்படும் நிலையில் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தலைமையிலான  அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின்  வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளதை  அவதானிக்க  முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் 10 உள்ளூராட்சி சபைகளில் 9 சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், காரைதீவு பிரதேச சபையில் மரச் சின்னத்திலும் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மொத்தமாக 66, 563 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் இக்கட்சிக்கு 55…

Read More

மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த மகளிரணியை பாராட்டுகின்றார் டாக்டர்.ஹஸ்மியா!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக என்னோடு தோழோடு தோழ் நின்று பாடுபட்ட மக்கள் காங்கிரஸின் மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தொிவிக்கின்றேன். அத்துடன், எமது கட்சியின் வெற்றிக்காக எமது பெண்கள் பல பிரதேசங்களில் நோன்பு நோற்று பிராா்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தொிவிக்கின்றேன். டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிரணி தேசியத் தலைவி

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது… பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது…

-ஊடகப்பிரிவு-   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 09 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது. மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வாக்களிக்கச் சென்ற வேளை..

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் பதிவு செய்தார்.      

Read More

‘மு.கா தலைமையை தட்டிக் கேட்டால் துரோகி என்று முத்திரைகுத்தி வெளியே தள்ளும் படலம் தொடர்கிறது’ அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், நற்பிட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களில் நேற்று (07) இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக கூட்டங்களில் கலந்துகொண்டு…

Read More

மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது மு.கா வெறித்தனமான தாக்குதல்!

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், சம்மாந்துறையில் இன்று (09) சின்னப்பள்ளி வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்!

வடக்கு மக்களின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்தச் செயலணியின் ஊடாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேற முடியாது தவிக்கும் அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து, அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயற்பாடுகளுக்கு முசலி ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது. முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி தௌபீக் மதனி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல சமூகங்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ஜனாதிபதியின்…

Read More