Headlines

“இலங்கையின் வாய்ப்பான சூழலை பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” பங்களாதேஷ் சுதந்திரதின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகள் நேற்று மாலை (26) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பங்களாதேஷ் நாட்டின் 47 வது சுதந்திர மற்றும் தேசியத் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கம்…

Read More

தேநீர் கோப்பைக்குள் ஆவி பிடிக்கும் அரசியல்!

-சுஐப் எம்.காசிம்- எதற்கெடுத்தாலும் வீறாப்பு பேசி அறிக்கை விடுவோருக்கு அகிலமே உருண்டையாம். நடப்பதை நாலு எட்டு வைத்து எட்டிப்பார்க்க இஸ்டமில்லாத இந்த பிரகிருதிகள், வீட்டுக்குள் ஏசியில் இருந்தவாறே சூடாக தேநீர் குடித்தவாறு அறிக்கைகள் விட்டு குட்டையை குழப்பி விடுகின்றனர். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை ஒரு போதும், கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது என்பதை இந்த பிரகிருதிகள் இன்னும் உணரவில்லை. இதுவே இவர்களின் அப்பாவித்தனம். நாட்டில் 1956, 1983 மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண நிலைமைகள் வேறு,…

Read More

மக்கள் காங்கிரஸும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்! பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன்!

-ஊடகப்பிரிவு-   சம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.நௌசாட், பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோருக்காக இடம்பெற்ற…

Read More

ஆரையம்பதி பிரதேச தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.   ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர் டி.லோகநாதன், எஸ்.ஜெகநாதன், திருமதி.ஜெ.மீனா, எஸ்.கைலாசபதி, பிரதேச செலயக உத்தியோகத்தர்கள்…

Read More

இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் நவவி எம்.பி பிரதம அதிதியாகப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மதுரங்குளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது 5,00,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நவவி எம்.பியின் விசேட நிதியிலிருந்து இளைஞர்களின் விளையாட்டுத்திறமையினை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  …

Read More

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இஷாக் ரஹுமான் எம்.பியினால் தீர்வு!

-ஊடகப்பிரிவு- சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே, கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட மகவெவ கிராமம். இந்த கிராமவாசிகள் பல வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், இப்பிரதேச மக்களுக்கு கிணறுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது குடி நீர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  அந்தவகையில் இந்த குடிநீர்க் கிணறுகளை மக்கள் பாவனைக்கு…

Read More

மட்டக்குளி பர்கசன் காபட் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸின் முயற்சியில் கொழும்பு, மட்டக்குளி, பர்கசன் வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.              

Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையங்கள் திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில்  தையல் பயிற்சி நிலையமும், பகுதி நேர சிறிய ஆடை தொழிற்சாலையும்  (மினி காமன்ட் ) அண்மையில் (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாந்தை மேற்கு, மவுலிக்குளம், நட்டாங்கண்டல், துணுக்காய், மல்லாவி ஆகிய கிராமங்களிலேயே தையல் பயிற்சி நிலையங்கள் மற்றும் பகுதிநேர ஆடைத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீனின் நெறிப்படுத்தலில்…

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் 20,000 பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள…

Read More

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் பேசவும் உள்ளார். அமைச்சர் ரிஷாட்…

Read More

முந்தல் பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசர் ஆகியோரினால் துவிச்சக்கர வண்டி, தையல் இயந்திரம், நீர்பாசனத்திற்கான மோட்டார் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி…

Read More

தையல் தொழிற்பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம்  மாவட்ட அமைப்பாளர்  அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் புத்தளம்  மாவட்டத்தில் பத்து மினிதையல் தொழிற்பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அவற்றில் சுமார் 200 மகளிர் பயிலுனராக இணைந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே. அவர்களது குறிப்பிட்ட ஆறு மாத கால பயிற்சி நெறி நிறைவுக்கு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு நிலையங்களிலும் பிரியாவிடை வைபவங்களும், கண்காட்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புத்தளம், சேனைக்குடியிருப்பில் உள்ள பயிற்சி நிலையத்தில்…

Read More