“வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!
-ஊடகப்பிரிவு- வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார். முதலமைச்சருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், இன்று வியாழக்கிழமை (05) கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை…
