Headlines

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இஷாக் ரஹுமான் எம்.பியினால் தீர்வு!





-ஊடகப்பிரிவு-

சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே, கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட மகவெவ கிராமம். இந்த கிராமவாசிகள் பல வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இவர்களது பிரச்சினையை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், இப்பிரதேச மக்களுக்கு கிணறுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது குடி நீர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  அந்தவகையில் இந்த குடிநீர்க் கிணறுகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இஷாக் எம்.பி தெரிவித்ததாவது,

“செழிப்பானதொரு இலங்கையை உருவாக்குவதற்கு இன, மத, கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக கை கோர்க்க வேண்டும். இன ஒற்றுமையை மேம்படுத்த என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்” என்றார்.

 

இனவாதம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில், இன ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இவ்வேலைத்திட்டம் அமையப்பெற்றுள்ளதாகவும், முஸ்லிம் தலைமைகள் மீது எங்களுக்கு ஓர் மரியாதையும், அன்பும் உருவாகியுள்ளது என்றும் குறித்த நிகழ்வில் பங்கேற்ற கிராம வாசிகள் தெரிவித்தனமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *