Headlines

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு என இலங்கைக்கான ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி, தனது முதலாவது ஆலோசகரும், தூதுக்குழுவின் துணைத் தலைவருமான அஹ்மடி  உள்ளிட்ட ஈரானிய பிரதிநிதிகளுடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிகழ்வு, நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலய உதவி தூதுவர் என்.எம்.அணஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி…

Read More

வெள்ளத்தால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உதவி!

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விருதோடை, செங்கட்டு, நல்லாந்தழுவை, ரெட்பானா, எல்லுச்சேனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துகொடுத்தார். (ப)      

Read More

சேதமடைந்திருக்கும் கெனல் வீதி பாலம் விரைவில் புனரமைப்பு!

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், ரகுபத்த கிராமத்துக்கு செல்லும் கெனல் வீதியில் அமைந்திருக்கும் பாலம் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா மற்றும் நஜீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளர் காமினி தென்னகோன் சேதமடைந்திருக்கும் பாலத்தை அண்மையில் பார்வையிட்டார். அத்துடன் சேதத்துக்குள்ளாகியிருக்கும் பாலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை வெகு விரைவில் மேற்கொள்வதாகவும்…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் இப்தார் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் தலைமையிலான, இப்தார் நிகழ்வு இன்று (10) புதிய சோனகத்தெரு மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் இடம்பெற்றது. மவுண்டன் ஓப் மேசி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில், யாழ் மாநகர சபை மேயர் திரு. இமானுவேல் ஆர்னோல்ட், ஏனைய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர். (ன)    

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மட்டக்குளிக்கு விஜயம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ், கொழும்பு 15, மட்டக்குளி சமித்புர ஸ்ரீ விக்கிரமபுர பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளை ஆராயும் நோக்கில், நேற்று (10) அங்கு விஜயம் செய்ததுடன், அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தப் பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்தும்  கேட்டறிந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்….

Read More

நிந்தவூர் மாட்டு வண்டில் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல்!

நிந்தவூரில் செயற்படும் மாட்டு வண்டில் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (08) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாட்டு வண்டில் உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -முர்ஷித்-    

Read More

பேசாலை கடற்கரை பூங்கா திறப்பு விழா!

மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில்,  வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில் உறையாற்றிய தவிசாளர், பேசாலை கிராமமானது பல அரசியல்வாதிகளையும், பல பட்டதாரிகளையும் உருவாக்கிய கிராமம், இன்று பல தேவைகளைக் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. இக் கிராமத்திற்கு…

Read More

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

-ஊடகப்பிரிவு- முதல் தடவையாக,  சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவுள்ளன. இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜூலை 07 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி,…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வவுனியா பிரதேசத்தின் வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  அந்த வகையில், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, ஆசிரியர் உபைதுல்லா ஆகியோர் இன்று (07) அங்கு விஜயம் செய்து வீதி செப்பனிடும் பணிகளை பார்வையிட்டனர். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல் காபட் இடப்பட்டுள்ள வவுனியா பாரதிபுரம்…

Read More

விருதோடை, நல்லாந்தழுவை பகுதிகளில் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு! 

புத்தளம், விருதோடை, நல்லாந்தழுவை பிரதேச  மக்களின் நீண்டகால கோரிக்கைக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கினால், விருதோடை, நல்லாந்தழுவை போன்ற பகுதிகளில்,பிரதேச சபை ஊழியர்களைக்கொண்டு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டன. (ப)  

Read More

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும்,  எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்…

Read More