Headlines

‘அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்’ என்.எம்.நஸீர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும்  குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் நேற்று  (20) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன் போது மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறு ரிதீகம மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பஹ்ரைன் இராச்சியம் பலமானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிராந்திய கேந்திர நாடாகத் திகழ்கின்றது. வளைகுடா சந்தையில்…

Read More

மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான எறிகணைகள் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்குமா?

-சுஐப் எம். காசிம்-  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன….

Read More

மாந்தை மேற்கு நாயாற்றுவெளி பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்….

மாந்தை மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின் கீழ் R. D. D. திணைக்களத்தினால் G. L. P. ஒப்பந்தகாரர்களிடம் வேலை கொடுக்கப்பட்டு தற்போது பள்ளிவாசல் பிட்டி ஊடாக நாயாற்று வெளி பாதையின் ஒரு பகுதி புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றது.

Read More

விஜயதாசவின் கருத்திற்கு VC தனது கன்னியுரையில் பதிலடி

உண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவ மாணவிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்” என ACMC இன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையில் தெரிவித்தார். உண்மை நிலை கண்டறிந்து அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்றும் அவா் கூறினார். உபவேந்தர் என்ற அடிப்படையில் வழங்கப்படும்…

Read More

‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…

Read More

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்க‌ளுக்கு அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் த‌ன‌து ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துள்ளதுடன், இன்றைய ந‌ன்னாளில் இல‌ங்கை, ப‌ல‌ஸ்தீன், மிய‌ன்மார் போன்ற‌ நாடுக‌ளில் வாழும் அக‌திக‌ளின் ஈடேற்ற‌த்திற்காக‌ அனைவ‌ரும் இறைவ‌னை பிரார்த்திக்கும்ப‌டியும் கோரிக்கை விடுத்துள்ளார். நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்ச‌ர் ரிஷாட் மேலும் கூறியிருப்ப‌தாவ‌து, “ர‌ம‌ழான் மாத‌ம் முழுவ‌தும் அல்லாஹ்வுக்காக‌ நோன்பிருந்து, அத‌ன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும்…

Read More

நிந்தவூர் பிரதான பூங்கா புனரமைப்பு!

பொதுமக்கள் தமது ஓய்வு நேரங்களில் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பூங்காக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள பூங்காக்கள் புணரமைக்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிந்தவூரின் பிரதான பூங்காவையும், அதனை சூழவுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் வேலைத் திட்டம், தவிசாளர் தாஹிரின் தலைமையில் இன்று (14) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பசுமை நகராக மாற்றும் திட்டங்களில்…

Read More

கிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்க முடிவு!

கிழக்கு மாகாண இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஜூன்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை (13) கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் நெக்டா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், பிரதியமைச்சரின்…

Read More

இஸ்மாயில் எம்.பியினால் வறிய குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களினால், புனித நோன்புப் பொருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் மற்றும் உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இன்று (14) இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவை தாய்மார்கள், வயோதிபப் பெண்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை இஸ்மாயில் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

Read More

கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!

குளியாப்பிடிய பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையிலான கிராமிய அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் தலைமையில் (10)நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், குளியாப்பிடிய பிரதேச சபை அமைப்பாளர் ஷேக் சுலைமான்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுக்கு சம்மாந்துறை மக்கள் பெரும் வரவேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மட் இஸ்மாயில் பதவி பிரமாணம் செய்த பிற்பாடு, முதல் தடவையாக சம்மாந்துறை மண்ணுக்கு விஜயம் செய்து, மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு இன்று (13) அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சம்மாந்துறை ஹிஜ்றா பள்ளிவாசல் முன்றலில் பெருந்திரளாக கலந்து கொண்ட சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் உற்சாக வரவேற்பளித்தனர். துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை…

Read More