Headlines

போருக்கு பின்னரான வெறுமையில் திசைதிரும்பும் தமிழ் அரசியல்

சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன.  கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே தமிழர்களின் வாக்குகளை பெறலாம் என்ற மனநிலையும் சிலரிடம் வளர்வது துர்ப்பாக்கியமே. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அபிவிருத்தி அரசியலை விமர்சித்து…

Read More

மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்…..

மன்னார் மாவட்ட தலைமை பொலிஸ் பெருப்பதிகாரி ரத்நாயக்க தலைமையில் மன்னார் பிரதேசபையுடன் இணைந்து மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது…. இந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்ட நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர்.மன்னார் மாவட்ட பொலிஸ் தலைமைப்பொறுப்பாளர் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகள் பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்……

Read More

ஆஷிக் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வெளிநாட்டு உறவுகளின் ஊடாக விருதோடை வட்டார மக்களுக்கு 30 குடிநீர் பைப்கள் கையளிப்பு …

வர்த்தக மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் பெறப்பட்ட வெளிநாட்டு உதவியின் மூலம் சேனைக்குடியிருப்பு மற்றும் ரெட்பானா ஆகிய கிராமங்களுக்கு குடி நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பைப் வசதிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது . தூய குடிநீரின்றி தவிக்கும் விருதோடை , வட்டார மக்களுக்கான குடி நீர் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விருதோடை வட்டார அமைப்பாளரும் , கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான…

Read More

ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கரத்தை சொந்தகாரர்களுக்கும் சமுர்த்தி வழங்கவும் அமைச்சர் ஹரிசனிடம், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!

வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு!!!  திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சமுர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன், சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டார் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000 அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர் , மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எந்தவிதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும்….

Read More

‘எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் தேடல் முயற்சி அதிகமாக உள்ளது. தமது சொந்தக் கையை நம்பும் தைரியம்…

Read More

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” வரக்காபொலையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில், வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வரக்காப்பொலயில் நேற்று (30) இடம்பெற்ற போது, பிரதம…

Read More

ஆண்மையுள்ள சிங்கத்தின் வீரமிகு கர்ஜனை!

-எஸ். ஹமீத்   (அல்லாஹ்வின் மீது ஆணையாக….இன்றுவரை அமைச்சர் ரிசாத்திடமிருந்து அல்லது அவர் சார்ந்தவர்களிடமிருந்து ஒரு கொந்தராத்து அல்லது  ஒரு சதமேனும் இலவசமாகவோ, இனாமாகவோ, எதற்குமான கூலியாகவோ  பெற்றிராதவன் நான். இனிமேலும் பெறுகின்ற எண்ணமும் இல்லாதவன். நமதிந்த எழுத்துக்கள் சமூகத்திற்கான நன்மை கருதியே அன்றி, எவ்வித சுய இலாபங்களுக்கானதும் அல்ல.-கட்டுரையாளர்.) நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தில் வைத்து ஓர் அரியேறு உரத்த குரலில் கர்ஜனை செய்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள என்னும் ஆட்சியாளர்களுக்குப் பெரும் தொனியில் சவாலும் எச்சரிக்கையும்…

Read More

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது. – அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு- நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்தல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். 3 நாள் இடம்பெறும் இந்த கண்காட்சியில் கட்டிடம், நிர்மாணம், பொறியியல் மற்றும் கட்டடகக்கலை தொழிற்துறையில் உள்நாட்டு,…

Read More

முசலியும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும்….

நாட்டில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்து வருகிறார். பல்வேறு விமர்சனங்கள், சரி பிழைகளுக்கு மத்தியில் ஒருசில விடயங்களை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட் பதியுதீனை அகற்றிவிட பல முனைகளிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் முசலிப் பிரதேசம் குறித்து எவ்வித கரிசனையும் அற்றிருந்தவர்கள் – முசலி மக்களைக்காட்டி பணம் சம்பாதித்தவர்கள் – முசலி மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள்…

Read More

கிண்ணியா மகமாறு வீட்டு திட்டம் ஆரம்பம்! 

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்றூபினால் கிண்ணியா, மகமாறு கிராமத்தில் மானிய அடிப்படையில் மாதிரி கிராமத்துக்கான வேலைகள் இன்று (28)  ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீடற்றவர்களுக்கான வீட்டினை பெற்றுக் கொடுக்கும் இந்தத் திட்டதில், முதற்கட்டமாக 30 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பித்து  வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ் றூப் மற்றும் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு முகாமையாளர் திருக்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ்,…

Read More

“சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்” அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே இலாபத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சியாண்மையை விட சமூக தொழில் முயற்சியாண்மையானது, பிரதானமாக சேவைகளையும், இலாபத்தையும் மையமாகக்கொண்டு இயங்கி வருவது, நமது நாட்டுக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சிலும், ஐக்கிய நாடுகளின் எஸ்கேப் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில்…

Read More

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, ஒலுவில், மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேச ஆதரவாளர்கள், பிரதேச உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் களமிறங்கிய வேட்பாளர்கள் போன்றோர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று (27.06.2018) சம்மாந்துறை மக்கள் பணிமனையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயிலின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த…

Read More