Headlines

திருமலை மாவட்ட மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லஹ் மஹ்ரூபின் அழைப்பின் பெயரில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி அவர்கள் நேற்று முன்தினம் (26) திருமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, நிலாவெளி, ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது,…

Read More

“நவ உதாகம்மான” வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உறுப்பினர் ஆஷிக் பங்கேற்பு!

கல்பிட்டி (ஆண்டான்கணி ) பிரதேசத்தில் “நவ உதகம்மான” வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் (26)இடம்பெற்றது.  இந்த விழாவில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் . இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் மற்றும்…

Read More

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் –  அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தை சேர்ந்த பெளத்த தேரர்களை சந்தித்த போதே, தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது வடமாகாண சங்கநாயக்க தேரர் கிரிஇப்பங்கவெவ…

Read More

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் வாழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வைபவம் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கைத்தொழில் அதிகாரசபையின் அதிகாரி சாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

Read More

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புகையிலைச் செய்கைத்…

Read More

மக்கள் காங்கிரஸின் களுத்துறைக் கிளையின் மத்திய குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை கிளையின் மத்திய குழுக் கூட்டம், களுத்துறை நகரசபை உறுப்பினரும், அமைப்பாளருமான ஹிஷாம் ஸுஹைல் தலைமையில் (23) நடைபெற்றது. இதன்போது, கட்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பொதுவசதிகள், சுயதொழில் என்பவற்றிற்கான நிதி பயன்படுத்தப்பட வேண்டிய செயற்கிரமம் விரிவாக ஆராயப்பட்டு, பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு அமைப்பாளரால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாவனைக்காக மேலும் 06 குளாய்நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹிஷாம் கூறியதாவது, சாதாரண மக்களுக்கு சாக்கடையாகவும் திட்டுப்பட்டதாகவும்…

Read More

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, நியமிக்கப்பட்ட ரியாஸ் சாலி நேற்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான ரியாஸ் சாலிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, நுகர்வோர் அலுவல்கள்  அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன…

Read More

வெள்ளைப்புறா விளையாட்டுக் கழகத்திற்கு ஒலிபெருக்கி வழங்கி வைப்பு!

விருதோடை (எல்லுச்சேனை) வெள்ளைப்புறா விளையாட்டுக்கழகம் விருதோடை வட்டார இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் மென்பந்து சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது . அதே நோக்கில் இவ்வருடமும் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு  மென்பந்து சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு வெள்ளைப்புறா விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் வேண்டுககொளுக்கிணங்க ஆஷிக்கின் சொந்த நிதியில் இருந்து சுமார் 100000/= ரூபாய் பெறுமதியான…

Read More

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்! -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு…

Read More

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை (25) இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திப்பதற்காக, அவர்களை…

Read More

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை (25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியாவில் வீட்டுத்திட்டம்!

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வவுனியா அண்ணாநகர் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கென நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மானிக்கும் பணிகள் இன்று (25  ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த அண்ணாநகர் மாதிரிக் கிராமங்களான படிவம் 1,2,3 ஆகிய பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய வீடமைப்பு…

Read More