Headlines

இஷாக் எம்.பியின் முயற்சியில் குடிநீர் கிணறுகள்!

குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வரும் அனுராதபுரம் மாவட்டம் கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து பழைய கிணறுகள் புனரமைப்பு மற்றும் புதிய கிணறுகள் நிர்மாணித்து கொடுப்பதற்கான வேலைகள் நேற்று முன்தினம் (09) இஷாக் ரஹுமான் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் மூலம்  புனர்நிர்மாணம் மற்றும் புதிதாய்…

Read More

பம்மன்ன மக்கள் சந்திப்பும் எதிர்கால அபிவிருத்தி திட்டமிடல் கலந்துரையாடலும்!

கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன, ஹொரவதுன்னகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த 07 அன்று  அகில இலங்கை மக்கள் காங்கிஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான் மற்றும் பிரதேச இளைஞர்கள், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!  

இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டவரைபை உருவாக்குவது தொடர்பில், அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இரண்டு நாள் வேலைப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும், ஜெனீவாவின் சர்வதேச வர்த்தக அமையமும்…

Read More

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி….. அமைச்சர் ரிஷாட், ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்!

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள  வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கி தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம்,  கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் மோசமாக  பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குவதாகவும், இதுவரையும் இந்த வைத்தியசாலைகள்…

Read More

பாலமுனை மின்ஹாஜ் வட்டார புதிய உறுப்பினராக எச்.எம்.ஸிராஜ் நியமனம்!

அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தனது தேர்தல் கால வாக்குறுதியாக “தான் இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதேச சபையில் குறுகிய காலத்துக்கே பதவி வகிப்பேன் என்றும், பின்னர் தனது இடத்துக்கு பாலமுனை 02ம் பிரிவைச் சேர்ந்த பட்டியல் வேட்பாளர் எச்.எம்.சிறாஜ் என்பவரை நியமிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்” அதற்கிணங்க சிறிது காலத்தின் பின்னர், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அவ்வெற்றிடத்துக்கு குறித்த பட்டியல் வேட்பாளர்…

Read More

இஷாக் ரஹ்மான் எம்.பியினால் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அனுராதபுர மாவட்டம் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹொரிவில “விக்கசித்த சங்சதய மக்கள் அமைப்புக்கு” கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது. விக்கசித்த சங்சதய அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு உரையாற்றியதுடன், கதிரைகளையும் வழங்கி வைத்தார். (ன)

Read More

“நெருப்பாற்றைக் கடக்கவும் நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!

பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குவதனாலேயே பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்களை தேடிச் சென்று, அக்கட்சி உதவி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேசத்திற்கான மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு, நேற்று மாலை (07) மதுரங்குளியில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச…

Read More

சுயதொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு!

புத்தளம் மாவட்டத்தில் சுயதொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால், புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 411 பயனாளிகளுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (07) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரி…

Read More

“பாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது” கலாநிதி ஹசன் சொஹைப் முராத்!!!

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM Trust) தலைவராகவும், ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருக்கும் இவர், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வீடமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதித் தவிசாளர் இஸ்ஸதீன், பிரதேச சபை உறுப்பினர் மஹீசா உட்பட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ஐ)

Read More

பாலமுனை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அட்டாளைச்சேனை, பாலமுனை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (05) இரவு பாலமுனை விளையாட்டு மைதானமருகில் இடம்பெற்றது. நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாலமுனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும்,   ஊரில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலின் பின்னரான அரசியல் நடவடிக்கைகள்  தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. (ன)

Read More

வவுனியா முகத்தான்குளத்தில் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சிவாஜினியின் (அ.இ.ம.கா) வேண்டுகோளின் படி, இந்தக் கிராமத்தின் முக்கிய தேவையாக ஊர் மக்களால் தங்களது ஆலயத்தினை புனரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் ரூபாய் 10 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முகத்தான்குளம் இந்து ஆலயத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றபோது, பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச்…

Read More