Headlines

மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு சமையலறை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!

குருநாகல், மல்கடுவாவ பிரதேச  மக்களின் வேண்டுகோளுக்கமைய, மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு (அன்யோன்ய) தேவையான பீங்கான், கோப்பை ஆகிய சமையலறை உபகரணங்கள், மக்கள் காங்கிரஸின்  குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மல்கடுவாவ கிராம சங்கத் தலைவர் அமரசிங்க, மல்கடுவாவ அமைப்பாளர் துஷாரி தமயந்தி உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

கல்கமுவ அல் /அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ மஸ்ஜிதுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்கமுவ பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும்…

Read More

காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டை!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட போது, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் நேர்மை மிக்க ஓர் இளம் அரசியல்வாதியைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் பெயர் ஏ.எச். சனூஸ். இம்முறை…

Read More

வன்னியில் மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகளே அமைச்சர் ரிஷாட்டின் இலக்கு!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள வன்னி பிரதேசத்தில் எந்தவொரு ஓலை வீடும் இருக்கக் கூடாது என்ற உயரிய இலக்கை நோக்கியே அமைச்சர் றிஷாட் பதியுதீன் பயணிக்கின்றார் என வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரிப் தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா, மன்னார், தலைமன்னார் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டறியும் பொருட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பை ஏற்று அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில்…

Read More

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்!

உள்நாட்டுக் கிழங்கு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று (05) கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் லங்கா சதொச பெறுகை உத்தியோகத்தர்கள் கிழங்கு விவசாயிகளிடம் சென்று 1 கிலோ கிழங்கு 90 ரூபா வீதமும், கிழங்கு விவசாயிகளினால் லங்கா சதொசவிற்கு கொண்டு வந்து கொடுக்கப்படும் 1 கிலோ கிழங்கு 100 ரூபா வீதமாகவும், பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இவ்வாறு…

Read More

வயதெல்லையை நீடிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!

அரச பாடசாலைகளில் சமய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களில், இஸ்லாம் சமய பாடத்திற்கு விண்ணப்பிப்போரின் வயதெல்லையை 18 தொடக்கம் 45  வயதுக்கு இடைப்பட்டதாக நீடிக்குமாறு பிரதமரிடமும், கல்வி அமைச்சரிடமும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இவர்களிவருமிடமும் எழுத்துமூலம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுமார் 18 வருடங்களின் பின்னரேயே, கடந்த அரசாங்க காலத்தில் அதாவது, 2010ஆம் ஆண்டு இறுதியில் 150 மௌலவி ஆசிரியர்களுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன….

Read More

அனுராதபுர அலுத்கமயில் தையல் பயிற்சி நிலையம் அங்குரார்ப்பணம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய நுவரகம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அலுத்கம கிராமத்தில் யுவதிகளுக்கான புதிய தையல் பயிற்சி நிலையம் கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புடவைக்  கைத்தொழில் நிருவனத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி நிலையத்தை, இஷாக் ரஹ்மான் எம்.பி உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைத்தார். (ஸ)

Read More

விடத்தல்தீவு, மக்தூம் சிட்டியில் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில், மன்னார், விடத்தல்தீவு மக்தூம் சிட்டியில்  பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ், வட மாகாண இளைஞர் அணித்தலைவர் முனவ்வர் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)  

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்வி எனும் அழியாச் செல்வத்தினை  மாணவர்களிடையே மெருகூட்டும் ஓர் அங்கமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாட்டின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அனுசரணையில் வசதி குறைந்த மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  கடந்த 27 – 08- 2018 அன்று வழங்கி வைக்கப்பட்டன.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதேச சபை…

Read More

வன்னி கள விஜயமும் உண்மைத் தன்மையும்!

வடக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் இந்தக் களப் பயணத்தில் இணைந்துகொண்டனர். அதில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் அதன் தலைவர், சிரேஷ்ட …

Read More

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக நிகழ்ச்சி ஒரு பாரிய படியாகும் என்று நான் நம்புகிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வு நியமங்களுக்கான   வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பட்டய…

Read More