அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா தள வைத்தியசாலை விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!
கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்பு மற்றும் ஜெய்கா (JICA) திட்டத்தினூடாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக, வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது….
