Headlines

புத்தளம் – அறுவக்காடு கழிவகற்றல் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளம், அறுவக்காட்டுப் பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச மக்கள் இன்று (19) இலவன்குளம் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம் அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

7 வது , 8 வது , 9 வது ,10 வது 11 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் தம்பலகமம் பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி, கல்மெட்டியாவ வட்டாரத் தலைவர் ஆபிலூன், ரபீக  ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 7 வது வேலைத்திட்டம் – அரபா நகர் பௌசுல் அமீன் வீதி 1 மில்லியன்…

Read More

உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவின் அமைச்சில் கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நசீரின் தலைமையில், உருளைக்கிழங்குக்கு நியாயமான விலையை பெற்றுத்தருமாறு கோரி பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ஆர்பிக்கோ, கீல்ஸ், லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், எதிர்வரும்…

Read More

இஸ்மாயில் எம்.பியின் முயற்சியில் சம்மாந்துறையில் “அரச ஒசுசல”!

மக்கள் நலன் கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சம்மாந்துறையில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அண்மையில் சந்தித்து க் கலந்துரையாடிய இஸ்மாயில் எம்.பி, சாம்மாந்துறை பிரதேசத்தில் “அரச ஒசுசல” ஒன்றை அமைப்பதற்கான தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார். மேலும், சம்மாந்துறை பிரதேசத்தில் ‘அரச ஒசுசல’ ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு…

Read More

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு! கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

கோதுமை மாவை ஆகக்கூடிய சில்லறை விலையான 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, பேக்கரி உரிமையாளர் சங்கத்தை இன்று காலை (19) சந்தித்த அமைச்சர் ரிஷாட், கோதுமை மாவின் விலையுயர்வை பயன்படுத்தி பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பாவனையாளரை பாதித்துள்ளதாகவும் எனவே, மீண்டும் பழைய விலையில் பாணை விற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரின்…

Read More

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கருப்புப்பட்டியுடன் பதாதை ஏந்தி எதிர்ப்பு!

கொழும்பில் இருந்து புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ள குப்பைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் நேற்று (18) கல்பிட்டி பிரதேச சபையின் 07 வது அமர்வின்போது, தனது எதிர்ப்பினை கருப்பு நிறப்பட்டி அணிந்தும், “புத்தளம் கொழும்பின் குப்பைத்தொட்டியல்ல” என்ற வாசகத்துடனான பதாதை ஏந்தியும் வெளிக்காட்டினார். பின்னர் இதுப்பற்றி அவர் சபையில் கருத்துத்தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைகள் மருத்துவக்கழிவுகளும் இரசாயனக்கழிவுகளும் பிளாஸ்த்திரிக் கழிவுகளுமே இக்குப்பை…

Read More

தலைமன்னாரில் தீ விபத்து! நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர் முஜாஹிர்! 

தலைமன்னார் பியரில் இன்று அதிகாலை (19) வீடொன்று எரிந்து முற்றாக சேதமடைந்ததுள்ளது. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையினை உடன் செய்து கொடுத்தார். அத்துடன், இந்த தீ விபத்தில் சுமார் 25 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும்,  இது தொடர்பாக நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும் தவிசாளர் தெரிவித்தார் இதேவேளை,…

Read More

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு.

ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்திற்கான தேவாலய சுற்றுப்புற பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் நிகழ்வு  மாந்தை பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்… தமிழ், முஸ்லிம், என்ற இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற…

Read More

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சு

நற்பிட்டிமுனை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும், அந்த கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றிவைப்பதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும் உதவிகளுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை பள்ளி நிர்வாகசபை தலைமையில் உள்ளடங்கிய, ஊர் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அடங்கிய குழுவினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று காலை (18) அமைச்சில் சந்தித்து தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியதுடன், மேற்கொண்டு இந்த கிராமத்தின் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்….

Read More

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட்…

Read More

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

 – முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 18ஆவது நினைவு நாள் நேற்று முன்தினமாகும். 2000ஆம் ஆண்டு…

Read More

புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு நேற்று (16) விஜயம் செய்தார். தவிசாளர் குழு அங்குள்ள முகாம் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மீள்குடியேற்றம், அடிப்படைத்தேவைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். தவிசாளர் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது மேலான…

Read More