Headlines

“இரு வாரங்களுக்குள் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள  காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இரு கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். காணி மறுசீரமைப்பு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக உடனான சந்திப்பின் போது, காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு காணி மறுசீரமைப்பு…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- மூதூரில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

17 வது , 18 வது, 19 வது , 20 வது, 21 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா, வட்டாரக் குழுத்தலைவர்களான சியான், முபாரிஸ், சபீக், மாஜித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் இன்று (22) அப்துல்லாஹ்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் நானாட்டானில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், இன,மத பேதங்களுக்கு அப்பால் மன்னார் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை (20) மன்னார், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில், 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், சக்தி விளையாட்டுக்கழக மைதானத்தின் சுற்றுமதிலை அமைப்பதற்கான…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (22 ) இடம்பெற்றது. அதிகளவான  வளங்களைக் கொண்டுள்ள முசலி மக்கள், பொதுவாக விவசாயம் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றினை மாத்திரமே அவர்களது அடிப்படை தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் உள்ள…

Read More

“இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில் கட்டுகின்றார்கள்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று மாலை (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது, அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.   இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர…

Read More

மடாட்டுகமையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடாட்டுகமையில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏ.ஆர்.எம்.தாரிக்  மற்றும்…

Read More

புதியசாளம்பைக்ககுளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் வக்பு செய்யும் நிகழ்வு!

வவுனியா புதியசாளம்பைக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அல் அக்‌ஷா ஜும்ஆ பள்ளிவாசலை வக்பு செய்யும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இன்று (21) நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். (ன)  

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

15 வது வேலைத்திட்டம் கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், சூரங்கள் கற்குழி பிரதேச இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கி அதனை செப்பனிடும்  வேலைத்திட்டம் அப்துல்லா மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 16 வது வேலைத்திட்டம் பைசல் நகர் ஸம் ஸம் வீதி. அத்துடன்,…

Read More

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா!

புத்தளம், புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் வைர விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் எம்.நியாஸ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள உட்பட…

Read More

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா அவர்களினால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார். இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குனவர்தன,…

Read More

கனேவல்பொலையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனேவல்பொலயில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச கிளை  திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான…

Read More

பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முன்மாதிரி!

சம்மாந்துறை பிரதேசத்தின் வறிய குடும்பங்களை உள்ளடக்கிய  சது/ஜமாலியா வித்தியாலயத்தின்  நிலவரத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீலிடம் பாடசாலை நிருவாகத்தினர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற 15 மாணவர்களுக்கு, அவர்களது மேலதிக வகுப்பிற்கான வசதிகளை ஏற்படுத்தி, தனது மாதாந்த சம்பளத்தையும் அந்த மாணவர்களது கல்விக்காக தொடர்ந்தும் செலவு செய்வதற்காக பிரதேச சபை உறுப்பினர் சஹீல் முன்வந்துள்ளார். (ன)

Read More