“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். சவூதி அரேபியா நாட்டின் 88 வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று மாலை (25)…
