Headlines

அம்பாறை மக்களுக்கு அரசியல் அதிகாரம்!!! 

அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள்  அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது  அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது  பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில்  கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும்  ஆச்சரியம் அடைந்த  நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட  நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை…

Read More

தேர்தலில் தோற்கும் குதிரைக்கு பந்தயம் கட்வோரே அதிகம். பிரதியமைச்சர் அமீர் அலி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் பல இடங்களில் இருக்கின்றார்கள் என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை – நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு…

Read More

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கையை ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

ஊடகப்பிரிவு – ‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன்    தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர்  துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில்…

Read More

நிந்தவூரில், வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது. கடந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த…

Read More

பொத்துவிலில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் வரிய மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 08.07.2017அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

Read More

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்

  நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார். இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபையின் குழுக்களின் தலைவர் எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவிப்பு!!!

மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவித்தார். கற்பிட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (10) சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் விஷேட உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆஷிக், அதுதொடர்பில் மகஜர் ஒன்றையும் சபையின் தலைவரிடம் கையளித்தார். இதன்போது உரையாற்றிய அவர்…

Read More

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் வாழ்வாதாரப்பொருட்கள் வழங்கிவைப்பு….

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்….

Read More

முஸ்லிம் தலைமைகளின் இருப்புக்கான ஜனநாயகச் சமர்!!!

முஸ்லிம் சமூகத்தில் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமென்ற ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸையும், மக்கள் காங்கிரஸையும் நேரிடை, எதிரிடை மோதல்கள், முறுகல்களுக்கு தயார்படுத்தியுள்ளன. இதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பக்கத் துணையாகப் பல கட்சிகளும், உள்ளூர்த் தலைவர்களும் துணையாக நிற்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தேசிய ரீதியில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர் சிலர். எனினும் சிங்களத் தேசியமும், தமிழ்ப் பெரும்பான்மையுமே மக்கள் காங்கிரஸின் அரசியல் போக்கையும், நோக்கையும் சந்தேகிக்கின்றனர். ஆனால் மக்கள்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் ஏன் இணைந்து கொண்டேன்? முனாஜித் மௌலவி விளக்கம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தொடர்ச்சியான முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்கு, அவரது பகீரத முயற்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தனது அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள  மேற்கொண்டுவரும் முயற்சிகள் நீதமானதல்ல என்ற காரணத்தின் அடிப்படையில், பிரதியமைச்சருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால், அவரை விட்டு வெளியேற தான் நேர்ந்தது என்று மௌலவி முனாஜித் (சீலானி) தெரிவித்தார். பிரதியமைச்சர் மஸ்தானின் ஆலோசகராகவும், அவரது அரசியல் பயணத்தில் தோள் கொடுத்தவருமான மௌலவி முனாஜித், அகில இலங்கை…

Read More

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்; நேற்று (10.07.2018) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதேஅமைச்சர் இதனை தெரிவித்தார். கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் மற்றும் சீன…

Read More

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று மாலை (10) இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்தார். அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணிகளுக்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் எனவும்  பல்வேறு சவால்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில்…

Read More