Headlines

வாழைச்சேனை பிரதேச மு.கா ஆதரவாளர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

(முர்ஷிட் கல்குடா) வாழைச்சேனைப் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நேற்று மாலை (29) இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து இணைந்துள்ளனர். இதன்போது கல்குடாத் தொகுதியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன், கட்சியின் போராளிகள் மற்றும் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல்…

Read More

மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தின் இப்தார்! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

(முர்ஷிட் கல்குடா) மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மருதமுனை அல்/மதினா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.நபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்…

Read More

காத்தான்குடி நகரசபை தேசிய பட்டியல் பிரிப்பு!

(முர்ஷிட்  கல்குடா) காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கும் வகையில், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (28) காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ்.மாஹிர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, எஸ்.மாஹிர் (தாறுஸ்ஸலாம் வட்டாரம்), எம்.ஜௌபர்கான் (மீராபள்ளி வட்டாரம்), முகைதீன் சாலி (அல்-அக்ஸா வட்டாரம்), எஸ்.சப்ரி (நூறாணியா வட்டாரம்) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அகில இலங்கை மக்கள்…

Read More

தலைமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் திறந்து வைப்பு!

வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான புதிய பாலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 22 மீற்றர் பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார்,…

Read More

தாருல் ஹிகம் அனாதை இல்லத்தின் இப்தார் நிகழ்வு.. இஷாக் எம்.பி பங்கேற்பு!

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம்  அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது. அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான்  கலந்து கொண்டார். சுமார் 55 க்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும் இவ் அனாதைகள் இல்லம், பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம்…

Read More

தர்கா நகரில் வடிகான்கள் தோண்டும் பணி ஆரம்பம்!

பேருவளை, தர்கா நகர், ஷெய்க் பாஸி மாவத்தையின் இருபுற வடிகான்களையும் தோண்டும் பணிகள்,  மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் தலைமையில்  (26) ஆரம்பமானது. ஏறத்தால 20 வருடங்களுக்குப் பிறகு பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் முயற்சியினால் இவ்வடிகான்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ன)    

Read More

கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்று தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். (ன)

Read More

“தலைமன்னார் வைத்தயசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” தவிசாளர் முஜாஹிர்!

தலைமன்னார் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினருமான ஸ்டாயு அவர்களுடனும் இன்று தலைமன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், மேற்படி வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக் குறை சம்பந்தமான விடையங்களினை கேட்டறிந்துகொண்டார் நீண்டகாலமாக நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரினால் எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான தீர்வினை உடனுக்குடன் பெற்றுத்தருமாறும்…

Read More

ஹெக்டர் அபுஹாமி எம்.பி – பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் சந்திப்பு!

கல்பிட்டி விவசாயிகளுக்கான மானியம் மற்றும் பாடசாலைக் கட்டிடம், மைதான புனரமைப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருமாறு ஹெக்டர் அப்புஹாமி எம்.பிக்கு கடிதம், அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைப்பு! -ஊடகப்பிரிவு- ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அபுஹாமி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோரிக்கிடையிலான சந்திப்பு ஹெக்ட்டர் அபுஹாமி அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது. இதன்…

Read More

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

-சுஐப் எம்.காசிம்- நாட்டின் துறைசார் நிபுணர்களையும் பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்க்கும் தேசியப்பட்டியல் திட்டம் இன்று பலரையும் தொற்று நோய்க்குள்ளாக்கியுள்ளது. இப்பட்டியலுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எட்டாப்பொருத்தம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் இத்திட்டம் அமுலான 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஏழு தேர்தல்களில் (1989, 1994, 2000, 2002, 2004, 2010, 2015) இந்தத் தேசியப் பட்டியலுக்காக அதிகம் முண்டியடித்ததும், முரண்பட்டதும் முஸ்லிம் கட்சிகளே. முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தலில் (1989) கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலும் பல…

Read More

மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் நகரில் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பில், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 15 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகக் கட்டடத் தொகுதியை  அமைப்பதற்க்கான இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர பிதா துஷார சன்ஜீவ, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், மாகாண முதலமைச்சின் செயலாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரச நிருவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர்…

Read More

ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதிதியாக இஷாக் ரஹுமான் எம்.பி!

பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் (26) இடம்பெற்றது. இந்நிகழ்வில்  விஷேட அதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார்  அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உட்பட பலரும்  கலந்துகொண்டனர். (ஸ)  

Read More