Headlines

தாருல் ஹிகம் அனாதை இல்லத்தின் இப்தார் நிகழ்வு.. இஷாக் எம்.பி பங்கேற்பு!





அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம்  அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது.

அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான்  கலந்து கொண்டார்.

சுமார் 55 க்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும் இவ் அனாதைகள் இல்லம், பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் காணப்படுகின்றது. ஆகையால் இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகண்டு, பொருளாதார நெருக்கடிகள் இன்றி அனாதை இல்லத்தை நடாத்திச் செல்ல தான் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக இஷாக் எம்.பி தெரிவித்தார்.

(ஸ)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *