Headlines

குச்சவெளியில் அ.இ.ம.கா. ஏற்பாட்டில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

குச்சவெளி அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (11) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, பாராளுமன்ற உறுப்பினர்களான் அப்துல்லாஹ் மஹ்ரூப் , இஷாக் ரஹ்மான் கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் ஆகியோர் உட்பட…

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் திருகோணமலை, இறக்கண்டி அல் ஹம்றா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம்  (11) இடம்பெற்றது. இச்சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், டொக்டர் ஹில்மி, கலாநிதி ஜமீல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

அ.இ.ம.கா. ஏற்பாட்டில்  இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா, தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் அண்மையில்  இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, மஹ்ரூப் எம் பி, கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்!!!

சுஐப் .எம். காசீம் எண்ணற்ற | ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். தோப்பூர் பிரதேச மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் ரஷாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற…

Read More

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்!!!

இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தம்புள்ளை வர்த்தகர்களுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டார் . தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தகர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் இந்த சந்தர்ப்பங்களின் போது பொலிசார் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக கவலை தெரிவித்தனர். அமைச்சர் இங்கு…

Read More

தம்புள்ளை விவகாரம்: அமைச்சர் றிஷாத் கலந்துரையாடல்

-அஸீம் கிலாப்தீன் – தம்புள்ளை நகரில் கடந்த புதன் அன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினமும் நேற்றும் அங்கு உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை தம்புள்ளை நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லீம் வர்த்தர்கள் முக்கியஸ்தர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்போதைய பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இன நல்லிணக்க விடயங்கள் தொடர்பிலும்…

Read More

சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்ட கதைதான் இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலையும் – அமீர் அலி

-சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருவதனால் சமூக உரிமைகளை மறந்து வாளாவிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி உரையாற்றினார். கட்சியின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டத்தில்…

Read More

தட்டிக்கேட்டால் துரோகிகள்! ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நானும், அமீர் அலியும், நஜீப் ஏ மஜீதும் அன்று தட்டிக் கேட்ட போது எங்களைத் துரோகிகளென…

Read More

காத்தான்குடி ஹோட்டல் திறப்பு விழா:  சிறப்பு விருந்தினராக பிரதி அமைச்சர் அமீர் அலி

நீச்சல் தடாகம், ஜிம் சென்றர், தங்குமிடம் போன்ற வசதிகளுடன் கூடிய விடுதி திறப்பு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி உரிமையாளர் அல்ஹாஜ் முபீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலியும் கலந்து சிறப்பித்தார்.

Read More

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி அக்கறைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத் திறப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத்திறப்புவிழாவில் இன்று (11-02-2017)அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் பிரதித் தலைவர் ஜமீல், Dr.ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

வடக்கு,கிழக்கில் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பயிற்சிப்பட்டறை

-முஹம்மட் ஜஹான்- லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் அண்மையில் இந்தியாவின் சென்னை நகரில் நிறுவன தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது தொடர்பாக நேற்று எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார். வடக்கு,கிழக்கில் பயிற்சிப்பட்டறை மற்றும் விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது என்றும்…

Read More