Headlines

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம் – அமைச்சர் றிஷாத்

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம். ஒற்றுமையின் மூலமே அதிகாரத்தை வசப்படுத்த முடியும் மூதூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு….   -சுஐப் எம் காசீம் – முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்ரெடுப்பதற்கான பாதுகாப்புக்கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்குமாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வருவதற்கு சமூக ஒற்றுமையே அத்தியாவசியமானது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். மூதூரில் சதொச கிளயை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் உரையாற்றினார். பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில்…

Read More

கடந்த வாரம்  பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய  உரை (வீடியோ)

கடந்த வாரம் 08.02.2017 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய  உரை.

Read More

கோ.ப.மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு

கோ.ப.மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 13.02.2014 திகதி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் 178 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் கோ.ப.மேற்கு பிரதேசசெயலாளர் நெளபல் முன்னால்…

Read More

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா முஸ்லிம் பாடசாலையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பற்றிய இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்,…

Read More

அமைச்சர் றிஷாத் சதொச நிறுவனத்திற்கு விஜயம்!

வவுனியாவுக்கு நேற்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம் செய்திருந்தார்.   வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமின்றி அரிசியையும் மற்றும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பது தொடர்பில் அங்குள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அரசாங்கம் அரிசிக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யும்  வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.  

Read More

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்- பிரதேச செயலாளருக்கு றிஷாட் பணிப்பு.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார். செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற போது உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப்பணிப்புரையை விடுத்ததுடன், அமைச்சர்களும் எம்பிக்ககளும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்பற்றும் போது அதிகாரிகள் அசிரத்தைக் காட்டுவது கண்டனத்துக்குரியதென அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார். அமைச்சின் ஊடகப்பிரிவு.

Read More

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம்!!!

அமைச்சின் ஊடகப் பிரவு இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று (13.02.2017) ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இணைத் தலைவர்களான அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், மஸ்தான் எம் பி ஆகியோரின் தலைமையில்…

Read More

கிண்ணியாவில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் மாபெரும் பொதுக்கூட்டம் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும், மாபெரும் பொதுக்கூட்டமும் கிண்ணியாவில் நேற்று (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட வீதிகள் திறந்து வைப்பு

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட மார்கட் வீதி மற்றும் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ஆகியன ஆரம்பித்து திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் நேற்று 12.02.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனும், விஷேட அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். மேலும், அநுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், குருணாகல்…

Read More

கந்தலாய் பிரதேசத்தில் ஆடை தொழில் பயிற்ச்சி நிலையம் திறப்பு

நேற்று முன்தினம் 11.02.2017 திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

புல்மோட்டையில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் மக்கள் சந்திப்பு

புல்மோட்டை அன்வாறுல் உலூம் அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுமக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இச்சந்திப்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், டாக்டர் சாபி ஷிஹாப்தீன், தேசிய அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Read More