Headlines

வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லை- ஹிரு TV யில்  திலக் காரி­ய­வசம் (வீடியோ)

வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லை என நேற்று (16) ஹிரு TV யில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் ஆதாரங்களுடன் விபரிக்கும் வீடியோ காட்சி.

Read More

முஸ்லிம் எம்.பி.க்களின் ஆலோசனைகளை பெற்ற பின்பே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஹலீம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு தனது அறிக்­கையை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவிடம் சமர்ப்­பித்­ததும் அதன் பிர­திகள் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்டு அவர்­க­ளது கருத்­து­களும் ஆலோ­ச­னை­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச்…

Read More

அஷ்ரப் பெற்றுக்கொடுத்த காணிக்கு உறுதிப்பத்திரம் வழங்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

–ஏ.எச்.சித்தீக் காரியப்பர் திருகோணமலை மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சுமார் 17 வருடங்களாக அமர்த்தி வாசிக்கப்பட்ட அல்லது முற்றாக மறைக்கப்பட்ட ஒரு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமலை குச்சவெளி பிரதேசத்திலுள்ள புடவைக்கட்டு என்ற கிராமத்தில் வாழும் மக்கள் அமைச்சர் றிஷாத்தை சந்தித்து, மர்ஹும் அஷ்ரபினால் கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளோ வேறு ஆவணங்களோ இதுவரை கிடைக்கவில்லை…

Read More

முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்த நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நேற்று முன்தினம் (15)  கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார். இதன்போது முதலைப்பள்ளி “தாருல் உலூம் கஸீஸுல் ஹுதா” மத்ராஸா மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விற்கான வசதிகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அத்தோடு தொண்ணூறு ஏக்கர் பெரிய பள்ளிவாயல் மத்ரஸா பிரச்சினைகளையும்…

Read More

புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர்ப் பாய்ச்சல்

-அமைச்சின் ஊடகப் பிரிவு மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார். புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து திடீரென விஜயம் செய்த அமைச்சர் அரிசி நிலவரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் கேட்டறிந்தார். புறக்கோட்டை மொத்த…

Read More

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்.

சுஐப் எம் காசிம்   இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில்…

Read More

நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து இனவாதச் சூழலியலாளர்களுக்கு தலைமை தாங்கி அவர்களை போஷித்து வரும் ஒடாரா குணவர்த்தன, ஆனந்த தேரர், சஜீவ சமிக்கர தலைமையிலான “சுரகிமு ஸ்ரீலங்கா” என்ற  வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான முஸ்லிம் விரோத இனவாத அமைப்பு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வடக்கு முஸிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ’பெண்ட்ரைவ்’ இல் நுகர்வோர் பாதுகாப்பு…

Read More

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம்; அமைச்சர் றிஷாத் பெருமிதம்

-சுஐப் எம் காசிம் இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் புது…

Read More

புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதனை குறிக்கோளாக கொண்டதாக இவ்விஜயம் அமைந்திருந்தது. இவ்வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் ரத்தனாயக்க மற்றும் வைத்தியர்கள் உடனான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றதுடன், வைத்தியசாலை வளாகம், கட்டிட வேலைகள் நடைபெறும்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட நவவி MP

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி…

Read More

ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி உடனடித்தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் 15.02.2017ம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படுமென்று கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நேற்று முன்தினம்  14.02.2017ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே அவர் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் தங்களது நெல் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லையென்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதலை இன்னும் ஆரம்பிக்கவில்லையென்றும் ஓட்டமாவடியில் கவனயீர்ப்புப்பேரணியொன்றை…

Read More

நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More