Headlines

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான நியமனப் பத்திரங்களை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (14) தாக்கல் செய்தது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மககள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.    

Read More

மு.கா முக்கியஸ்தர்களான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். இன்று காலை (14) அம்பாறை நகரில் இந்த முக்கியஸ்தர்கள் இருவரும் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில், மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமையும்…

Read More

கொழும்பு மாநகர சபை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கொழும்பு மாநகர சபைக்கு, நிவ் பசார்  பிரிவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான இறுதிக் கலந்துரையாடல்  நேற்று (13)  மக்கள் காங்கிரஸ்  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.    

Read More

திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வேட்புமனுவை இன்று காலை  (14)  கிண்ணியாவிலுள்ள, மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில், மக்கள்  காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இறுதி செய்தனர்.

Read More

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள். உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி…

-முர்ஷித்- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்று மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் 22 வது ஆண்டு நிறைவும், மாணவர் வெளியேற்று நிகழ்வும் நேற்று முன்தினம் (11) வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

வவுனியா மதீனா நகர் அல்/அக்ஸா முன்பள்ளி கலைவிழா!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மதீனா நகர், அல் / அக்ஸா சிறுவர் முன்பள்ளியின் 2017ம் ஆண்டுக்கான கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். அப்துல் பாரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.        

Read More

முள்ளிப்பொத்தானை மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- முள்ளிப்பொத்தானை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், நேற்று முன்தினம் (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில், கட்சி போராளிகளின் பங்குபற்றுதலோடு, முன்னாள் மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபின் காலத்திலிருந்து இற்றைவரை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில்…

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான அறிவித்தல்!

-ஊடகப்பிரிவு- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில், இது வரை கட்சித் தலைமை எந்த இறுதியான முடிவையும் மேற்கொள்ளவில்லை. வேட்பாளர் தெரிவு இன்னும் நிறைவு பெறவும் இல்லை. இந்த சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டு, இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

தொழில் முயற்சியாளர் விருது விழா!

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும், கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (11) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், தயா கமகே, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்…

Read More

மல்கடுவாவ பிரதேச மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின்  மல்கடுவாவ பிரதேச பெரும்பான்மை மக்களுடனான சந்திப்பொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)  மல்கடுவாவ பிரஜா மண்டபத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான  அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற  இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.    

Read More

பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தினருடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உயர் அதிகாரிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (12)  அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.        

Read More