Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!





 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *