Headlines

மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!

  -ஊடகப்பிரிவு –   வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை,…

Read More

கண்டியில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (18) செலுத்தியது. கம்பளை நகரசபை, பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்துக் களமிறங்கும் மக்கள் காங்கிரஸ், நாளை கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி…

Read More

ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள, தமிழ் முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பு செயலாளர்களான ஆனந்த, பொறியியலாளர் கிருஷ்ணா மற்றும் கணக்காளர் நடராஜா உட்பட பெருமளவிலானவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், ஜமாலியா பிரதேசத்தில் நேற்று மாலை (17) இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்கு தாம்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 நடைபெறும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி (2018) நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Read More

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர் பிரதேசத்தின் பிரபல சமூக சேவகரும், கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவருமான ஏ.எஸ்.ரிபாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். கட்சியின் மத்திய குழுத் தலைவர் அப்துல் ரசாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே, அவர் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். காலாகாலமாக எமது பிரதேசவாழ் மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தபோதும், இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் இதுவரை இடம்பெறவில்லை. கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசியலில்…

Read More

தேர்தல் தினம் 21 அறிவிக்கப்படும்!

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

குறிஞ்சாக்கேணி பாலர் பாடசாலைகளின் கலை,கலாசார நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை மூன்று முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை கலாசார நிகழ்வு குறிஞ்சாக்கேணி வீ.சீ மைதானத்தில் சனிக்கிழமை (16) அன்று இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.முஜீப், ஆசிரியர் என்.எம். சமீம்(ECCD), அரபா பாடசாலை அதிபர் ஆர்.நஸீம்…

Read More

அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கடன் வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான அசார்தீனின் தலைமையில், அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு, வீட்டுக்கடன் வழங்கி வைக்கப்பட்டது. குருநாகல் மாவட்ட காரியாலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக ஒரு குழுவினருக்கு இந்தக் கடன் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை வேட்பாளர் முஹம்மத் நிலாரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்புப் பணிகள் நேற்று முன்தினம் (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிம்புலாஎல்ல வீட்டுத் தொகுதியின் எப் (F) வலையத்திலிருந்து இலக்கம் 162/265/A/1 தொடக்கம் 162/11 வரையான வீதியின் புனரமைப்புப் பணிகளே ஆரம்பித்துவைக்கப்பட்டமை…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல அரபுக்கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல, ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கல்லூரியின்  மேல்மாடிக் கட்டிட அபிவிருத்திப் பணிகள் நேற்று முன்தினம் (16) முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திவுரும்பொல மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அபிவிருத்திப் பணிகளுக்காக சுமாார் இருபது இலட்சம் ரூபா நிதி, அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் குளியாப்பிடிய பிரதேச…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி முன்னிலையில் முன்னாள் தவிசாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில், ஓட்டமாவடி 208 B/2 வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) பிரதி அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஒட்டமாவடி 208 B/2 வேட்பாளரான எச்.எம்.ஏ.கபூர் ஹாஜியார் மற்றும் மீராவோடை கிழக்கு வட்டார வேட்பாளரான முன்னாள் தவிசாளர் ஹமீட் ஆகியோர், பிரதி அமைச்சர் அமீர் அலியின் முன்னிலையில் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டனர்.        

Read More

திருகோணமலை நகரசபை வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை நகர சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இன்று மாலை (17) இடம்பெற்றது. மூவின மக்களின் ஒத்துழைப்புடன், ஜமாலியா பிரதேசத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் தெரிவு மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.            

Read More