Headlines

மு.கா முக்கியஸ்தர், முன்னாள் தவிசாளர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ.பி.எஸ். ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே, தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட், தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Read More

”சில்ப சவிய” 2017..

சுய தொழில் முயற்சியாளர்களுக்கான ”சில்ப சவிய” கண்காட்சியின் இறுதி நிகழ்வினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் (08) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.        

Read More

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…

உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை   (08/ 12/ 2017) இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள்…

Read More

முன்னாள் எம்.பி முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

முஸ்லிம் காங்கிரஸின்  முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில்  இன்று (08) இணைந்து கொண்டார். இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.        

Read More

வவுனியா மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், புத்தளம் தளவைத்தியசாலைக்கு 18 வைத்தியர்கள் நியமனம்!

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும்  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் உதவியினால் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்திகளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குவதற்க்கான திட்ட வரைவு செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில், புத்தளம் தள வைத்தியசாலைக்கான திட்ட வரைவு வேலைகளை முன்னெடுக்கும், CECB நிறுவனத்தின்…

Read More

மாஞ்சோலை பதுரியா அல்/மினா வித்தியாலய கட்டிடத்திறப்பு நிகழ்வும்.. பரிசளிப்பு விழாவும்!  

மட்டக்களப்பு மாவட்ட மத்திய கல்வி வலையத்துக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் / மினா வித்தியாலயத்தின் 07 வது பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதிக் கல்விப்…

Read More

சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு பாரிய நிதியுதவி.. அமைச்சர் ரிஷாட் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்..

தயாரிப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளில் ஈடுபடும் 5000 க்கு மேற்பட்ட  கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவிலான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்துகின்றது.  09 வர்த்தக வங்கிகள் அடங்கலான 11 முன்னணி நிதி நிறுவனங்களின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது. “சிறிய மற்றும் நுண் கைத்தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பல உற்பத்தி நிறுவனங்கள் போதுமான அளவு நிதியைப் பெறுவதில்லை. இதனாலேயே அந்த தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்களால் சூழல் அதிகளவில் மாசடைகின்றது. இதனைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்…

Read More

விதவைகளுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில், இளம் பெண்களுக்கான முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில், கணவரை இழந்த விதவை பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்துக்கமைய, சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,கொழும்பில் இன்று (06/ 12/ 2017 ) இடம்பெற்றது.      

Read More

முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளின் கலை கலாசார நிகழ்வில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

முள்ளிப்பொத்தானையில் உள்ள  05 முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை, கலாசார நிகழ்வு, முள்ளிப்பொத்தானை, அல்/ஹிஜ்ரா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த திங்கட்கிழமை (04/12/2017) அன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தம்பலகாமம் பிரதேச செயலக…

Read More

இலங்கையின் சுதந்திர தொழிற்பாட்டு நடவடிக்கையை உலகின் மிகப்பெரிய கடற்போக்குவரத்து ஜாம்பவான் ஆதரிக்கிறது!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கடற் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் இலங்கை அதன் கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட எடுத்த முடிவை ஆதரிக்கிறது. இந்த கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட முன்மொழியப்பட்ட 2018 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட ஆலோசனை மிகவும் முன்னேற்றகரமானது என இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் உடைய சிரேஷ்ட தெற்காசிய பணிப்பாளர் ஜூலியன் மைக்கல் பெவிஸ். டென்மார்கின்…

Read More

தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு முல்லையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க ரிஷாட் நடவடிக்கை

முல்லைத்தீவில் மீள்குடியேறி, வீடில்லாமலும், காணிகள் இல்லாமலும் கஷ்டப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால், துபாய் அரசின் நிதியுதவியுடன், 120 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் தலைமையில், முல்லைத்தீவு ஹிஜ்றாபுரத்தில், கடந்த திங்கட்கிழமை (03) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த  மே மாதம் ஐக்கிய அரபு…

Read More