Headlines

மு.கா முக்கியஸ்தர்களான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் மக்கள் காங்கிரஸில் இணைவு!





-ஊடகப்பிரிவு-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

இன்று காலை (14) அம்பாறை நகரில் இந்த முக்கியஸ்தர்கள் இருவரும் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில், மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *