Headlines

மூடப்படுகிறது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More

ரமளான் நோன்பின் மூலம் சான்று பகிரக் கூடிய சமூகமாக மாறுவோம்

– எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar – உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பினை நோற்கவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை தனிமனிதன் சென்ற ரமளானில் விட்ட தவறுகளை நிவர்த்திக்க எதிர் வரும் காலத்தினை பயன் படுத்த வேண்டும் என உறுதி கொண்டு நற்கிரியைகளுடன் தம்மை இணைத்து உளரீதியானதும், பௌதீக ரீதியானதுமான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றான். அதேவேளை சமூகத்திலுள்ள அமைப்புகளும், மஸ்ஜிதுகளும் ரமளானுக்கான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. உறங்கு நிலையில் இருந்த மஸ்ஜித் நிருவாகங்கள் உச்சாகத்துடன் மஸ்ஜிதுகளை சுத்தப்படுத்துவது முதல்…

Read More

முகமது அலியின் குருதியில் நச்சுத் தன்மை – இஸ்லாமிய முறைப்பாடி ஜனாஸா நல்லடக்கம்

-BBC- அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத்…

Read More

“நான் என், இறைவனுக்கு அஞ்சுகிறேன்” (காஃபா அருகில் நடைபெற்ற, உண்மைச் சம்பவம்)

ஓர் நாள் இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் “ஒசாமா” என்ற அரபு இளைஞர் டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து , அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ” ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? ” என நான் கேட்டேன். அதற்கு அவர் ” ஒரு ரியால்…

Read More

முச்சக்கரவண்டி சாரதி, அனுமதிப்பத்திர வயதெல்லை 23..?

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான வயதெல்லையை 23ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்புத் தொடர்பிலான அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அகில இலங்கை முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டீ.ஆர்.ஆர்.பள்ளி இதனை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென ஒரு குழுவினை நியமிக்குமாறு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

Read More

அரபு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நாளை நோன்பு ஆரம்பம்

உலகின் பல்வேறு பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாளை திங்கட்கிழமை 6 ஆம் திகதி தொடக்கம் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. இந்த புனித ரமழான் மாதத்தில் நற்கருமங்களை அதிகமாக்கி, ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நமக்கு துணை நிற்கட்டும்..!

Read More

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற…

Read More

மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படை கப்பல் இலங்கைக்கு!

கல்கத்தாவிலிருந்து மொரிஷியஸுக்கு சென்று கொண்டிருந்த மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படையின் ‘சீஜிஎஸ் பர்ரகியுடா’ எனும் ஆழ் கடல் ரோந்து கப்பல் நேற்று முந்தினம் (2) ஹம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு வருகை தந்தது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், இக்கப்பல் இன்றைய தினம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் இருந்து மொரிஷியஸ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை…

Read More

வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்

உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணைய மயப்படுத்தும் பணிகளை, சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமைக்குள் இந்த பெயர்கள் இணைய பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இடையில் இதற்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

Read More

மதமாறி இஸ்லாமிய பெண்னை திருமனம் முடித்தமைக்கு ஹாஸிம் அம்லாவே காரணம்- வெய்ன் பார்னெல்

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம்…

Read More

ரமழான் தலை பிறை மாநாடு 06 ஆம் திகதி

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை செவ்வாய் இர­வாகும். எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது. பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு அறியத் தரு­மாறும் தெரி­வித்­துள்­ளது….

Read More