Headlines

6 வருடங்களாக நாய் பால் குடித்து வரும் சிறுவன்

இந்­திய ஜார்கண்ட் மாநி­லத்தில் சிறு­வ­னொ­ருவன் 6 வரு­டங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வரு­கிறான். ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகு­தியில் வசிப்­பவர் சுபேந்தர் சிங், இவ­ரு­டைய மனைவி பிங்கி குமாரி. மகன் மொகித் குமார் (6). இந்த மொகித் குமா­ர் அவ­னு­டைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வரு­கிறார். இந்த சிறு­வனின் இந்த செயலை நிறுத்த பெற்றோர் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுத்தும் நிறுத்த முடி­ய­வில்லை. இதனால் அந்த சிறு­வன் பாட­சா­லைக்கு அனுப்­பப்­ப­டா­மல் வீட்­டி­லேயே உள்ளான்….

Read More

யார் சொன்னாலும் போராட்டங்களை நிறுத்தமாட்டோம்

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் பொய்களால் கல்வியை விற்பதற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவு செய்த பெயர் முதலாக அனைத்துமே பொய்கள் தான் எனும் குற்றச்சாட்டினை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லகிரு முன்வைத்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், பிரதமர் ரணிலும் தற்போது தெரிவித்துள்ளனர்….

Read More

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பேதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்டி,கொழும்பு,அம்பாந்தோட்டை நகரங்களை மையப்படுத்தி அபிவிருத்தி வலயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாகவும் பிரமதர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேல்மாகாணம் ழுமுவதும் பெரிய நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தையும் சீனாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி…

Read More

தாருஸ்ஸலாம் விவகாரம்: முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் கண்டன அறிக்கை

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை…. கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கடந்த 20 வருடங்களான இதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் நான் மாகாண சபை உறுப்பினராக எதிர்க் கட்சி வரிசையில் இருந்துகொண்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். அதிகாரம் நமது கையில் இல்லாமையினால் குருகிய வேலைத்திட்டங்களை மாத்திரமே எம்மால்…

Read More

நாமலின் வழக்கு ஒத்தி வைப்பு

நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கை ஓகஸ்ட் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது…

Read More

“ஊழல் மற்றும் இலஞ்சம்” புதிய பாடத்திட்டம் அறிமுகம்

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறிகளை 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல்…

Read More

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன் – சங்ககார

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம். இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட்…

Read More

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!

-சுஐப் – புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி இன்று புத்தளத்திலே சிறப்பாக இயங்கி வருகின்றது. இதன் துரித வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குபவர் கல்லூரியின் ஸ்தாபகப்பணிபாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது அஷ்ரப் முபாரக் ரஷாதி அவர்களாகும். இந்தக்கல்லூரியை தரமான ஒரு கல்லூரியாக அமைப்பதற்கு அவர் மேற்கொண்டுவரும் முயற்சி மிகவும் மெச்சத்தக்கதாகும்….

Read More

ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!

ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது. ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது…

Read More

சர்வதேசத்துடன் வேறு வெளிக்கடப்பாடுகள் கிடையாது

சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும் தாம் அன்று பண்டாரநாயகவின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக் கடப்பாடுகள் தமக்குக் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம்(24) முற்பகல் வரக்காபொல நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர்மசிறி சேனாநாயக்க அவர்களின்…

Read More

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு!

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்று நாளை 27 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல்…

Read More