நவீன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த ஜப்பான் இணக்கம்
120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள My Number எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் Fukuda Sensai நேற்று முந்தினம்(26) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை…
