Headlines

வெளிநாடு செல்ல திறைசேரியின் அனுமதியை பெற வேண்டும்

-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு – கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது, திறைச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் அண்மையில் ரஷ்யாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தனர். இதற்காக கோடிக்கணக்கான நிதி விரயம் செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் குறித்த பயணம் ஜனாதிபதியினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே திறைசேரியின் அனுமதிக்கான உத்தரவையும் ஜனாதிபதி…

Read More

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா இலங்கையை வந்தடைந்தார்!

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையை வந்தடைந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், மேலும் பல முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்திக்கவுள்ளார். அத்துடன்,…

Read More

குவைத்தில் இலங்கையர் கைது

குவைத் நாட்டில் தனது தங்குமிடத்தில் கள்ளச்சாரயம் (கசிப்பு) காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளி சல்மியா என்ற பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வசித்து வந்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வசிப்பிடத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ தொடர்மாடியில் பரவியதை அடுத்து, அவர் கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது.

Read More

ஜே.வி.பியின் அகில இலங்கை தொழிற்சங்க தலைவர் பதவியில் இருந்து சந்திரசேகர் விலகினார்

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராமலிங்கம் சந்திரசேகர் விலகியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்த சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஹற்றன் நகரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் 10 ஆவது மாநாட்டில் உரையாற்றிய சந்திரசேகர், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல்…

Read More

சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளது!

சிகரெட்டுக்களின் விலையானது ரூ.11 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 15 % வற் வரி சேர்க்கப்பட்டதால் சிகரெட் ஒன்றிற்கான விலை ரூ.5 இனால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 35 ரூபாவாக இருந்த சிகரெட் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்ககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபா முதல் 50 ரூபா வரையில் சிகரெட் ஒன்றின் விலை நிர்ணயிக்கப்படலாம் என…

Read More

முதலீட்டாளர்களை தேடுகிறது அரசு

கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை  மீள புனரமைத்து  ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில் கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. ‘பரந்தன் இரசாயன கூட்டுதாபனம்’ என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கி வந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட வேண்டுமெனவும், தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது. தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும்…

Read More

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. ரெயில் என்ஜின்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை உருவாக்கி உள்ளது. இந்த ரெயில் என்ஜின் வருகிற 2017-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில்…

Read More

திஸ்ஸவுக்கு நோட்டீஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை மன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read More

வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று…

Read More

தில்லையடி ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வு

தில்லையடி பிரதேசத்தில் உள்ள ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வொன்று பெற்றோருக்கு (25.9.2016) இடம் பெற்றது. வளவாளர்களாக ஆசிரியர் அஸ்லம், சமூக ஆர்வலர் முஜாஹித் நிஸார் ஆகியோர் செயற்பட்டனர்.

Read More

மைத்திரி இன்று, நாடு திரும்புகிறார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 18ம் திகதி அமெரிக்க புறப்பட்டுச் சென்றிருந்தார். ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கயிருந்த காலத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை…

Read More

குளவித் தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதி

விடுமுறையைக் களிப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, நுவரெலியாவுக்கு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தார். தனது நண்பர்கள் சிலருடன் விடுதிக்கு முன்பாக இருந்து சனிக்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்த போதே, விடுதியில் குளவி கூட்டிலிருந்த குளவிகள் திடீரென கலைந்து, கொட்டியுள்ளன.  இதில் காயமடைந்த அந்த எம்.பி  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Read More