Headlines

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்

அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் மாதத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு, புதிய அரசியல் அமைப்பு குறித்த ஆரம்பக் கொள்கைகள் அனைத்து குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்படி, இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய…

Read More

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது!

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அதிக குளிரூட்டபட்ட அறையில் ராம்குமார் உடல் வைக்கப்பட்டு உள்ளது. எனவே பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் டாக்டர் இடம் பெற வேண்டும் என்று முறையிட்டு ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், 30-ந்தேதி வரை பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது….

Read More

ஏறாவூரில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய கணவனின் உள்ளக் குமுறல்

ஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே! இதன்பின்னர் கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது முகநூலில் பதிவிட்ட அவரது உள்ளக் குமுறல்கள் எமது வாசகர்களுக்காக … ஆறு மாத குழந்தையில் தந்தையை இழந்து தந்தையின் அரவனைப்புக்காய் ஏங்கியவள். பின் சகோதர பாசம் காத்துநின்றவள் எதுவும் கிட்டாது பெருமூச்சி விட்டவள்.. தாய் என்ற பாசத்தை மட்டுமே உணர்ந்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டவள். பாசத்துக்காய் ஏங்கிநின்றவள் என் தேவதை….

Read More

ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.

Read More

நேதாஜி விமான விபத்தில் தான் இறந்தார்

1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தைபேயில் நடந்த விமான விபத்தில்தான் நேதாஜி இறந்தார் என இங்கிலாந்து இணையதளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.

Read More

விமான ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி

சீனாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தாம் பயணம் செய்­ய­வி­ருந்த விமா­னத்தை தவ­ற­விட்­டதால், அவ்­வி­மானம் புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக விமான ஓடு­பா­தையில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர்.  பெய்ஜிங் சர்­வ­தேச விமான நில­யைத்தில்  அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. ஷாங்காய் நக­ருக்குச் செல்லும் பிளைட் சி.ஏ.1519 விமா­னத்தில் இத் தம்­ப­தி­யினர் பயணம் செய்­ய­வி­ருந்­தனர்.  காலை 9.30 மணிக்கு இவ்­வி­மானம் புறப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால், பய­ணி­க­ளுக்­கான இறுதி அழைப்பின் பின்­னரும் இவர்கள் விமா­னத்தில் ஏற­வில்லை. தாம் விமா­னத்தை தவ­ற­விட்­டதை உணர்ந்த இத்­தம்­ப­தி­யினர் விமான ஓடு­பா­தைக்குள் புகுந்து…

Read More

வற்வரி முறைமை அவசியம் வருமான அதிகரிப்பும் தேவை

அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர்…

Read More

ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் குறித்து பிரிட்டனும் இலங்கையும் ஆராய்வு

ஜெனிவா மனித உரிமை பேரவையில்  கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள்   தொடர்பில்   இலங்கை அரசாங்கமும்  பிரிட்டன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்  பிரிட்டன்   பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும்   இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல்  தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.    இந்த சந்திப்பையடுத்து  தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை…

Read More

புஸ்ஸலாவை இளைஞர் மரண வழக்கு ஒத்திவைப்பு

புஸ்ஸலாவை – ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கம்பளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சாந்தனி மீகொட, நேற்று உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட நீதவான்,  எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

சேலை அணியத் தேவையில்லை

தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ராம்குமாரின் பிரேத பரிசோதனையை 30ம் திகதி வரை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்று உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்த போது, இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர். பிரேத பரிசோதனையின் போது பரமசிவம் சார்பில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் இடம்…

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஏறாவூர் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணின், கணவரது சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதவிர தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுத்…

Read More