Headlines

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு  பதிலாக நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொடுப்பனவான 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

நிலையான சமாதானம் பொருளாதார வளர்ச்சியின் மூலமே!

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவின் தலைவரும், பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி தொடர்பான ஜேர்மன் பாராளுமன்ற  இராஜாங்க செயலாளருமான உவே பக்மேயர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல், இலங்கையில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக வர்த்தக  தூதுக்குழுவினரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததற்கு அமைய ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனி…

Read More

கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.

Read More

அதிவேக நெடுஞ்சாலை இன்று இலவசம்

தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பாதையை பொதுமக்கள் இன்று இலவசமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

26 பாடசாலைகள் மூடப்பட்டன

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

‘தற்காலிக விடுமுறை வழங்கலாம்’

நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுமாயின், அவைதொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார். பாடசாலையைக் கொண்டுநடத்துவதற்கு இயலாத நிலைமையொன்று ஏற்பட்டால், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை வழங்குவதற்கோ அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கோ அனுமதி உண்டு என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

சீரற்ற காலநிலை! கடுவலை அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்

கடுவலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் நுழைவு பகுதி வெளியேறும் பகுதிகளில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளன. பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சீரற்ற காலநிலை: 31, 851 பேர் இடம்பெயர்வு : 8445 குடும்பங்கள் நிர்க்கதி

நிலவும் சீரற்ற காலநிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் சிக்கி 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர். இத­னை­விட சீரற்ற கால­நிலை கார­ண­மாக 25, 820 குடும்­பங்­களைச் சேர்ந்த 88 933பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 65 வீடுகள் முற்­றா­கவும் 1240 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேலும் பாதிக்­கப்­பட்­டோரில் 8445 குடும்­பங்­களைச் சேர்ந்த…

Read More

கனடா உயர் ஸ்தானிகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைகான கனடா உயர் ஸ்தானிகர் செல்லி வைடனிங்கும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(16)பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Read More

யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம்…

Read More