Headlines

கண்டியில் ஆசிரியர்களுக்கு செயலமர்வு

கல்வி அமைச்சின் அனுசரணையில் கண்டி குருதெனியவில் ஆசிரியர்களுக்கான வதிவிட செயலமர்வு ஒன்று நடத்தப்படுகிறது. நாளையும் நாளை மறுதினமும் இந்த செயலமர்வு குருதெனியவில் உள்ள கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், நுவரெலிய, கம்பளை, கொத்மலை மற்றும் ஹட்டன் வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 40 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். தோழில் வழிகாட்டல் என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெறுவதாக குருதெனிய வள நிலைய உதவி முகாமையாளர் எம் தங்கராஜ் அறிவித்துள்ளார்.

Read More

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More

வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளி : களனியில் சம்பவம்

நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து ஆற்றை அண்டிய வீடுகளில்  முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால்  களனி ஆற்றை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மருத்துவமனைகள் மழைவெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக உருவாகியுள்ள வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள் பலவும் மூழ்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குருநாகல் போதனா மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து மருத்துவமனைக்குள் நீர்புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில் நேற்று காலை முதல் மண்மூட்டைகளை அடுக்கி இராணுவத்தினர் மருத்துவமனையை பாதுகாத்துள்ளனர். தம்புள்ளை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக தம்புள்ளை போதனா மருத்துவமனையின் ஒருபகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஏனைய கட்டிடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் கலா-பளளுவாவி குளத்தின்…

Read More

கொழும்பு செல்லும் பிரதான வீதியில் நடைபெற்ற மீன் வர்த்தகம்!

பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (17) பிரதான வீதியின் ஒரு மருங்கில் மீன் விற்பனை செய்து வித்தியாசமான முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர். நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பேலியகொடை மீன் சந்தை முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த தகவல்கள் அறியாத நிலையில் நேற்றுக் காலையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மீன் லொறிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு வருகை தந்திருந்தன. இதனையடுத்து பேலியகொடைகொயிலிருந்து கொழும்பு வரும் பிரதான வீதியின்…

Read More

வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று (17) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே கொழும்பு மாவட்டத்திலும்…

Read More

மஹிந்தவின் வெற்றிவிழா நாளை குருநாகலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.  இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை 19ஆம் திகதி குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read More

வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக…

Read More

முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி – அமைச்சர் றிஷாத்

-சுஜப் எம். காசிம் – மன்னர் ஆட்சி தொடக்கம் இன்றைய ஆட்சிவரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக இணக்கத்துடனும் நடுநிலைமை பேணும் தன்மையுடனும் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களை மாற்றுஇனங்களுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில சமூக வலைத்தளங்கள் திட்டமிட்டு செயலாற்றுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேதனைதெரிவித்தார். புத்தளம் மதுரங்குளி அர்றஷீதிய்யா அரபுக்கல்லூரி பட்டமளிப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்துவருபவர்கள் அரசியல் பணிகளிலும் அவர்கள் தமது தனித்துவத்தை பேணிவருவதுடன்…

Read More

மோடியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார். இந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர்….

Read More

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத்  தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் எனவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்து அப்போதே சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில்,…

Read More