Headlines

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து…

Read More

புதிதாக 172 பொலிஸ் நிலையங்கள்!

நாடு முழுவதும் புதிதாக சுமார் 172 பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல், வெல்லவ பொலிஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாட்டில் தற்போதைக்கு 428 பொலிஸ் நிலையங்கள் செயற்படுகின்றன. இதனை 600 பொலிஸ் நிலையங்கள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். பொலிசாருக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விசாரணை முறைகள்…

Read More

பல்கலை மாணவர்களுக்கு 2208 மேலதிக அனுமதி

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கை இம்முறை மேலதிகமாக 2208 பேரால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. குறித்த மேலதிக மாணவர் அனுமதியின்போது பொறியியல் மற்றும் உயிரியல் தொடர்பான கணித, விஞ்ஞானப் பிரிவுகளின் புதிய பாடநெறிகளுக்கு 1800 வரையான மேலதிக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதன் பிரகாரம் இம்முறை மொத்தமாக 27603 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலதிகமாக அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான புதிய பாடநெறிகள் களனி, ஸ்ரீஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ, ருஹுணை பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட…

Read More

படையினருக்கும் 10000 ரூபா சம்பள உயர்வு!

கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது.இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். நேற்றைய தினம் (26) அமைச்சரவையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

Read More

பொதுமன்னிப்புக் காலம் சிறந்த பெறுபேறுகளை எட்டியுள்ளது!

இவ்வாரம் முதல் ஆரம்பமான சட்டவிரோத ஆயுதங்களை உரிய முறையில் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி முடிவடையவுள்ள இப்பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தம் வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும். இந்த பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு தண்டனை…

Read More

நாடு திரும்பினார் மஹிந்த!

தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார். தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் மஹிந்த சந்;தித்திருந்தார். மே தினக் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் தீவிர முனைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த நாடு திரும்பியுள்ளார். நேற்று நள்ளிரவு (26) அளவில் மஹிந்த நாடு திரும்பியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

Read More

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம்

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை (26) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவே கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய…

Read More

தொல்பொருள் ஆய்வு நிலையங்கள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

– ஊடகப் பிரிவு – பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிலையங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (26) ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் அஸ்கிரிய பீ்டத்தின் வெடருவே உபாலி தேரர் உள்ளிட்ட குழுவினரும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் பிரியசாந்த குணவர்த்தன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கல்…

Read More

சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் மற்றும் கொடூர நடவடிக்கைகள், பொருத்தமில்லா தண்டனை விதித்தல் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஜூவான் மென்டோஸ் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

யார் இந்த Dr.சாகீர் நாயக்?

– வை.எம்.பைரூஸ்  வாழைச்சேனை – உலகத்தின் சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் போன்ற எத்துறையாகவும் இருக்கலாம். இவ்வாறான பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய சமூகத்தால் மறந்து போய் விட்டாலும், அனைத்துலக நாடுகளாலும் கௌரவிக்கப்பட்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் தான் டாக்டர் சாகீர் நாயக் ஆவார். இவருடைய ஆரம்ப கால…

Read More