Headlines

5000 ரூபாய் போலி பணத்தாள் பாவணையாளர் கைது

5000 ரூபாய் போலி பணத்தாள் கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி   மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வரகாபொல வர்த்தக நிலையமொன்றில் கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த போலி பணத்தாள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்…

Read More

சவூதி – எகிப்தை இணைக்கும் வகையில் பாலம்

சவூதி அரேபியாவையும் எகிப்தையும் இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அறிவித்திருக்கிறார். இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென ஒரு அறிக்கையில் அரசர் தெரிவித்திருக்கிறார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக வந்திருக்கும் அரசர், விஜயத்தின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தப் பாலத்திற்கு சவூதி அரசரின் பெயர் வைக்கப்படும் என எகிப்தின் அதிபர் அப்துல் ஃபடா…

Read More

புத்தாண்டு போக்குவரத்துச் சேவையில் 6,000 பஸ்கள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, விசேட பஸ் போக்குவரத்துச் சேவையொன்றை நடத்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்காக 6 ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. இதற்கு மேலதிகமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காகவும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியது.

Read More

செங்காம மக்களின் பரிதாபங்கண்டு கண்கலங்கிய அமைச்சர் றிஷாத்!

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/04/2016) சென்றிருந்தார். இறுக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது விஜயம் அமைந்திருந்தது. சாய்ந்தமருது, கல்முனை, இறக்காமம், வரிபத்தான்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை, சம்மாந்துறை, அட்டாளச்சேனை, செங்காமம், பொத்துவில், மாவடிப்பள்ளி, சென்றல் கேம்ப், மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தார். மாளிகைக்காடு, வரிபத்தான்சேனை, அட்டாளச்சேனை ஆகிய இடங்களில், சதொச கிளைகளையும் திறந்து வைத்து உரையாற்றினார்….

Read More

மஹிந்தவின் பாதுகாப்புக்கு மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்(ASP) நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால், டப்ளியூ. திலகரட்ன, பீ.ஜீ.எஸ். குணதிலக, பீ.எம்.பீ. பெரேரா ஆகிய மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட இடமளிக்கப் போவதில்லை

அரச ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 2500 கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்காக நேற்று (07) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தரும் தனது கடமை தொடர்பில் நேர்மையாக பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகாலம் கிராம…

Read More

மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது..!!

பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 134 வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளுடன் மேலும் பல பெறுமதியான மரக்கட்டைகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்

பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தினால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூன்று பிரதான பாதைகளில் ஒரு பதையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார். இன்று (8) காலை கெண்டனர் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதாமாகவே புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை

ஹம்பாந்தோட்டையை ஒரு பொருளாதார மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் முதலீடுகளை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீன அரசாங்கம் பொலன்னறுவை பகுதியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப்பாதை இந்திய மற்றும் இலங்கைக்கான பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று (7) ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

இன்றுமுதல் ஆசன முன்பதிவுக்கு தடை.!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (8) முதல்   புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிகருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இச் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். 50 மேலதிக ரயில் சேவைகளும் 3482 மேலதிக இ.போ.ச. பஸ் சேவைகளும் நடத்தப்பட…

Read More